Post Office RD-ல் மாதம் ரூ.7,000 முதலீடு செய்தால்.. 5 வருடங்களில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?
தபால் நிலையத்தின் சிறு சேமிப்பு திட்டங்களில் ஒன்றான ரெக்கரிங் டெபாசிட் (Post Office Recurring Deposit) சேமிப்புத் திட்டத்த்தை பற்றி பார்க்கலாம்.
Post Office Recurring Deposit
தபால் நிலையத்தின் திட்டங்களில் சிறந்த வருமானத்தை தரும் திட்டங்களில் ஒன்று தான் ரெக்கரிங் டெபாசிட் (Post Office Recurring Deposit) சேமிப்பு திட்டம்.
இந்த திட்டத்தில் நீங்கள் மிக குறைந்த தொகையில் இருந்தே சேமிப்பை தொடங்கலாம். முக்கியமாக, இந்த திட்டத்தில் உங்களது பணம் பாதுகாப்பாக இருக்கும்.
இந்த திட்டத்தில் ரூ.100 மற்றும் அதற்கு மேல் (ரூ. 10 இன் மடங்குகளில்) மாதாந்திர முதலீடுகளை செலுத்தலாம். Recurring Deposit கணக்குக்கான கால வரம்பு 5 ஆண்டுகள் ஆகும்.
ஒவ்வொரு காலாண்டு முடியும் போது கூட்டு வட்டியுடன் உங்களது கணக்கில் சேர்க்கப்படும். இந்த திட்டத்தில் 6.7% வட்டி (Interest) வழங்கப்படுகிறது.
நீங்கள் மாதத்தின் 1 முதல் 15 ஆம் திகதிக்குள் கணக்கை திறந்தால் ஒவ்வொரு மாதமும் 15 ஆம் திகதிக்குள் பணத்தை Deposit செய்யப்பட வேண்டும். இதுவே நீங்கள் 15 ஆம் திகதிக்கு பிறகு கணக்கை தொடங்கினால், மாதத்தின் கடைசி வேலை நாளில் பணத்தை Deposit செய்ய வேண்டும்.
நீங்கள் பணத்தை சரியாக Deposit செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். தொடர்ச்சியாக நான்கு மாதங்களுக்கு டெபாசிட் செய்யாமல் இருந்தால் கணக்கு மூடப்படும். அவ்வாறு மூடப்பட்டால் இரண்டு மாதங்கள் கழித்தே Activate செய்ய முடியும்.
இந்த திட்டத்தில் கணக்கை திறக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் முடிந்த பிறகு முன்கூட்டியே பணத்தை திரும்பப் பெறலாம்.
மாதம் ரூ.7,000 முதலீடு
Post Office Recurring Deposit திட்டத்தில் மாதம் தோறும் ரூ.7,000 முதலீடு செய்தால் 5 ஆண்டு முடிவில் முதிர்வு தொகையாக ரூ.4,99,564 கிடைக்கும்.
அதாவது நீங்கள் 4,20,000 ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். இதற்கு வட்டி மட்டுமே உங்களுக்கு ரூ.79,564 கிடைக்கும்.
You May Like This Video
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |