வங்கி FD -ல் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 3 ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப கிடைக்கும் தொகை.., இவர்களுக்கு மட்டும்
மூத்த குடிமக்களுக்கு மூன்று வருட FD -ல் வங்கிகள் வழங்கும் சிறந்த சலுகைகளை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
இந்த FD மூத்த குடிமக்களுக்கு அவசரகால நிதியை உருவாக்க உதவுகிறது. FD பணப்புழக்கத்தை வழங்குகிறது. ஏனெனில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மூடிவிட்டு உங்கள் வங்கிக் கணக்கில் பணத்தைப் பெறலாம். மேலும், FD மீதான வட்டிக்கு வரி விதிக்கப்படும்.
தற்போது, தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு 3 ஆண்டு கால FDக்கு 7.75 சதவீதம் வரை வட்டி தருகின்றன.
தற்போது நாம், 10 வங்கிகளின் மூன்று வருட FD மீதான வட்டியைப் பற்றியும், ரூ.1,00,000 வரையிலான முதலீட்டுக்கு எவ்வளவு வட்டி கிடைக்கும் என்பதையும் இந்த பதிவில் பார்க்கலாம்.
பேங்க் ஆஃப் பரோடா(Bank of Baroda)
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் மூத்த குடிமக்களுக்கு மூன்று ஆண்டு FD மீதான வட்டி விகிதம் 7.75% ஆகும். மூன்று வருட FD -ல் நாம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வு காலத்தில் ரூ.1,25,895 கிடைக்கும்.
ஆக்சிஸ் வங்கி (Axis Bank)
ஆக்சிஸ் வங்கியில் மூத்த குடிமக்களுக்கு மூன்று ஆண்டு FD மீதான வட்டி விகிதம் 7.60% ஆகும். மூன்று வருட FD -ல் நாம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வு காலத்தில் ரூ.1,25,340 கிடைக்கும்.
HDFC வங்கி, ICICI வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி
HDFC வங்கி, ICICI வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகிய வங்கிகளில் மூத்த குடிமக்களுக்கு மூன்று ஆண்டு FD மீதான வட்டி விகிதம் 7.50% ஆகும். மூன்று வருட FD -ல் நாம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வு காலத்தில் ரூ.1,24,972 கிடைக்கும்.
கனரா வங்கி (Canara Bank)
கனரா வங்கியில் மூத்த குடிமக்களுக்கு மூன்று ஆண்டு FD மீதான வட்டி விகிதம் 7.30% ஆகும். மூன்று வருட FD -ல் நாம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வு காலத்தில் ரூ.1,24,238 கிடைக்கும்.
பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பாங்க் ஆஃப் இந்தியா
பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகளில் மூத்த குடிமக்களுக்கு மூன்று ஆண்டு FD மீதான வட்டி விகிதம் 7.25% ஆகும். மூன்று வருட FD -ல் நாம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வு காலத்தில் ரூ.1,24,055 கிடைக்கும்.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் மூத்த குடிமக்களுக்கு மூன்று ஆண்டு FD மீதான வட்டி விகிதம் 7% ஆகும். மூன்று வருட FD -ல் நாம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வு காலத்தில் ரூ.1,23,144 கிடைக்கும்.
இந்தியன் வங்கி (Indian Bank)
இந்தியன் வங்கியில் மூத்த குடிமக்களுக்கு மூன்று ஆண்டு FD மீதான வட்டி விகிதம் 6.75% ஆகும். மூன்று வருட FD -ல் நாம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வு காலத்தில் ரூ.1,22,239 கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |