Post Office RD-ல் தினமும் ரூ.100 முதலீடு செய்தால்.. 5 வருடங்களில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?
தபால் நிலையத்தின் சிறு சேமிப்பு திட்டங்களில் ஒன்றான ரெக்கரிங் டெபாசிட் (Post Office Recurring Deposit) திட்டத்ததில் தினமும் ரூ.100 முதலீடு செய்தால் 5 வருடங்களில் திரும்ப கிடைக்கும் தொகையை பற்றி பார்க்கலாம்.
Post Office Recurring Deposit
தபால் நிலையத்தின் திட்டங்களில் சிறந்த வருமானத்தை தரும் திட்டங்களில் ஒன்று தான் ரெக்கரிங் டெபாசிட் (Post Office Recurring Deposit) சேமிப்பு திட்டம்.
இந்த திட்டத்தில் நீங்கள் மிக குறைந்த தொகையில் இருந்தே சேமிப்பை தொடங்கலாம். முக்கியமாக, இந்த திட்டத்தில் உங்களது பணம் பாதுகாப்பாக இருக்கும்.
இந்த திட்டத்தில் ரூ.100 மற்றும் அதற்கு மேல் (ரூ. 10 இன் மடங்குகளில்) மாதாந்திர முதலீடுகளை செலுத்தலாம்.
இந்த சிறுசேமிப்புத் திட்டத்தில் மாதம் தோறும் ரூ.5,000 முதல் ரூ.20,000 முதலீடு செய்தால் 5 வருடங்களில் திரும்ப கிடைக்கும் தொகையை பற்றி பார்க்கலாம்.
Recurring Deposit கணக்குக்கான கால வரம்பு 5 ஆண்டுகள் ஆகும். ஒவ்வொரு காலாண்டு முடியும் போது கூட்டு வட்டியுடன் உங்களது கணக்கில் சேர்க்கப்படும். இந்த திட்டத்தில் 6.7% வட்டி (Interest) வழங்கப்படுகிறது.
குறிப்பாக இந்த திட்டத்தில் ஓராண்டுக்குப் பிறகு கடன் பெறலாம். நீங்கள் டெபாசிட் செய்யும் தொகையில் 50 சதவீதம் கடனாக வழங்கப்படுகிறது. அதனை தவணையாகவோ அல்லது ஒரே நேரத்திலோ செலுத்தலாம். வட்டி விகிதம் RD வட்டி விகிதத்தை விட 2 சதவீதம் அதிகம் ஆகும்.
தினமும் ரூ.100 முதலீடு
இந்த திட்டத்தில் நீங்கள் தினமும் ரூ.100 முதலீடு செய்ய நினைத்தால் மாதம் தோறும் ரூ.3 ஆயிரம் என இருக்கும்.
அதன்படி, Post Office Recurring Deposit திட்டத்தில் மாதம் தோறும் ரூ.3,000 முதலீடு செய்தால் 5 ஆண்டு முடிவில் முதிர்வு தொகையாக ரூ. 2 லட்சத்து 15 ஆயிரம் வரை கிடைக்கும்.
இதுவே நீங்கள் 5 ஆண்டுகள் முதிர்ச்சியடைந்த பிறகு கணக்கை நீட்டிக்க விரும்பினால், மாதம் ரூ.10 ஆயிரம் வீதம் பணத்தை முதலீடு செய்ய வேண்டும். அப்போது ஐந்தாண்டுகளில் உங்களுக்கு ரூ.7 லட்சம் கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |