மாதம் ரூ.12,500 முதலீடு செய்து ரூ.41 லட்சம் பெறலாம்! என்ன திட்டம் தெரியுமா?
மாதம் தோறும் ரூ.12,500 முதலீடு செய்து ரூ.41 லட்சம் பெறக்கூடிய திட்டம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
நீண்ட கால முதலீடுகளைச் செய்ய விரும்புபவர்களுக்கு அரசின் ஆதரவுடன் இருக்கும் திட்டமான பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டமே சிறந்தது. இந்த திட்டத்தில் முதலீட்டாளர்களை கவரும் வகையில் வரி சேமிப்பு போன்ற நன்மைகள் உள்ளன.
பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம்
PPF திட்டமானது ஆண்டுக்கு 7.1 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. பரஸ்பர நிதிகள் அல்லது பங்குகள் போன்ற சந்தை இணைக்கப்பட்ட முதலீடுகள் ஆகியவை PPF திட்டத்தை விட அதிக வருமானத்தை கொடுத்தாலும் அவைகள் ஆபத்தானவை.
இந்த திட்டத்தில் நீங்கள் சிறிய முதலீடு செய்து அதிக லாபத்தை பெறலாம். மேலும், PPF-ல் முதலீட்டாளர்கள் Exempt-Exempt-Exempt (EEE) நன்மைகளை பெற முடியும்.
உங்களின் மொத்த முதலீடு, சம்பாதித்த வட்டி மற்றும் முதிர்வுத் தொகைக்கு வரிகள் இல்லை. இது வரியில்லா சேமிப்பு விருப்பமாகும். PPF பங்களிப்புகளில் வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் சந்தாதாரர்கள் விலக்குகளைப் பெறலாம்.
ஒவ்வொரு இந்திய குடிமகனும் PPF கணக்கை திறந்து ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் முதலீடு செய்யலாம். குறைந்தபட்சமாக ரூ.500 டெபாசிட் செய்ய முடியும். PPF முதலீடுகளுக்கு 15 ஆண்டுகள் லாக்-இன் (lock-in period) காலம் உள்ளது.
மாதம் ரூ.12,500 முதலீடு
இந்த திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.12,500 முதலீடு செய்ய வேண்டும். இதன்படி, பிபிஎஃப் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.1,50,000 முதலீடு செய்வீர்கள்.
இந்த கணக்கீட்டின்படி 15 ஆண்டுகளில் மொத்தம் 22,50,000 ரூபாய் முதலீடு செய்வீர்கள். இதற்கு, 7.1 சதவீத வட்டி விகிதத்தில் வட்டியாக 18,18,209 ரூபாயும், 15 ஆண்டுகளில் (முதிர்வு காலம்) மொத்தமாக 40,68,209 ரூபாயும் பெறுவீர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |