Post Office சேமிப்பு திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு., 5 வருடங்களில் திரும்ப கிடைக்கும் பெரிய தொகை
அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டமான தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தேசிய சேமிப்புச் சான்றிதழ் (National Savings Certificate)
அஞ்சல் அலுவலகத்தில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் உள்ளன. அதில், இந்திய அரசாங்கத்திடம் இருந்து நேரடி ஆதரவை பெரும் தேசிய சேமிப்புச் சான்றிதழ் (National Savings Certificate) திட்டத்தை பற்றி பார்க்கலாம்.
இந்த திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு சிறந்த வருமானத்துடன் அதில் வரி விலக்கின் பலனையும் பெற முடியும். இந்த கணக்கை நாம் வேறொருவருக்கு மாற்றும் வசதியும் உள்ளது.
யார் தொடங்கலாம்?
* 18 வயதை பூர்த்தியடைந்தவர்கள்
* மைனர் சார்பாக ஒரு பாதுகாவலர்
* மைனருக்கு 10 வயது மேல் இருந்தால் சொந்த பெயரில் கணக்கை தொடங்கலாம்.
இந்த தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தின் வருடாந்திர வட்டி 7.7 சதவீதம் ஆகும். இதில், நாம் குறைந்தபட்சம் ரூ.1000 இல் முதலீடு செய்யத் தொடங்கலாம். இது தவிர, ரூ.100 மடங்குகளில் முதலீடு செய்யலாம்.
ரூ.1 லட்சம் முதலீடு
* தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் நாம் ரூ.1000 முதலீடு செய்தால் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, மொத்தம் ரூ.14,490 கிடைக்கும்.
* தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் நாம் ரூ.1,00,000 முதலீடு செய்தால் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, மொத்தம் ரூ.1,44,903 கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |