SBI PPF திட்டத்தில் மாதம் ரூ.5000 முதலீடு செய்தால்.., எவ்வளவு தொகை திரும்ப கிடைக்கும்?
எஸ்பிஐ வங்கியின் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டத்தில் மாதம் ரூ.5000 முதலீடு செய்தால் எவ்வளவு தொகை திரும்ப கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
SBI PPF Scheme
உங்கள் கனவுகளை நனவாக்கவும் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் முதலீடு என்பது முக்கியமானதாகும். உங்கள் வருமானத்தால் இருந்து சிறிது பணத்தை சேமித்து முதலீடு செய்ய விரும்பினால், SBI இன் PPF திட்டம் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.
இந்தத் திட்டம் முற்றிலும் பாதுகாப்பானது மற்றும் நல்ல வட்டி விகிதத்தையும் வழங்குகிறது. PPF ஒரு நீண்ட கால முதலீட்டுத் திட்டம் ஆகும்.
அரசு நிர்ணயித்துள்ள வட்டி விகிதம் அதில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு பொருந்தும். ஆனால், இது காலாண்டு அடிப்படையில் திருத்தப்படும். தற்போது, SBI PPF திட்டத்தில் ஆண்டுக்கு 7.1% வட்டி விகிதத்தை பெறலாம்.
இந்தியாவில் உள்ள எந்தவொரு குடிமகனும் தனது அருகிலுள்ள SBI கிளைக்குச் சென்று PPF கணக்கைத் திறக்கலாம். இதுதவிர ஓன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.
ஒரு பிபிஎஃப் கணக்கில், ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். அதன் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். இது 5-5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம்.
இந்த திட்டத்திற்கு அரசு ஆதரவாக இருப்பதால் , உங்கள் முதலீடுகளுக்கு பாதுகாப்பை வழங்குகிறது. நீங்கள் PPF இல் முதலீடு செய்யும் தொகை வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரி விலக்கை பெறும்.
மாதம் ரூ.5,000 முதலீடு
நீங்கள் எஸ்பிஐயில் பிபிஎஃப் (SBI PPF) கணக்கைத் திறந்து மாதம்தோறும் ரூ.5000 முதலீடு செய்ய வேண்டும்.
அதாவது, ஒவ்வொரு ஆண்டும் ரூ.60,000 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் மொத்த முதலீடு ரூ.9,00,000 ஆக இருக்கும்.
உங்களுக்கு வட்டியாக ரூ.7,27,284 கிடைக்கும். அதன்படி 15 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வு தொகையாக ரூ.16,27,284 பெறுவீர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |