400 நாட்கள் கொண்ட PNB FD திட்டத்தில் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?
400 நாட்கள் கொண்ட பஞ்சாப் நேஷனல் வங்கி FD திட்டத்தில் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் திரும்ப எவ்வளவு தொகை கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
PNB FD திட்டம்
நிலையான வைப்புத் திட்டங்கள் (FD) பாதுகாப்பு மற்றும் உத்தரவாதமான வருமானம் காரணமாக மிகவும் பிரபலமான முதலீட்டுத் தேர்வுகளில் ஒன்றாகும்.
வங்கிகள் பல்வேறு கால அளவுகளில் நிலையான வைப்புத் திட்டங்களை வழங்குகின்றன. இதில், முதலீட்டாளர்கள் தங்கள் தேவைகளின் அடிப்படையில் தேர்வு செய்கின்றனர்.
PNB 400 நாட்கள் FD என்பது 400 நாட்கள் (தோராயமாக 1 வருடம், 1 மாதம் மற்றும் 5 நாட்கள்) கால அவகாசம் கொண்ட ஒரு சிறப்பு நிலையான வைப்புத் திட்டமாகும்.
இது அரசாங்கத்திற்குச் சொந்தமான வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியால் வழங்கப்படுகிறது. 400 நாட்கள் கொண்ட PNB FD திட்டத்தில் பொது குடிமக்களுக்கு 7.25 சதவீத வட்டி விகிதமும், மூத்த குடிமக்களுக்கு 7.75 சதவீத வட்டி விகிதமும் வழங்கப்படுகிறது.
ரூ.10 லட்சம் முதலீடு
* 400 நாட்கள் கொண்ட PNB FD திட்டத்தில் பொது குடிமக்கள் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் வட்டியாக ரூ.81,923 கிடைக்கும். அதன்படி முதிர்வு தொகையாக ரூ.10,81,923 கிடைக்கும்.
* இந்த திட்டத்தில் மூத்த குடிமக்கள் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் வட்டியாக ரூ.87,758 கிடைக்கும். அதன்படி முதிர்வு தொகையாக ரூ.10,87,758 கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |