Post Office Fixed Deposit -ல் ரூ.25,000 முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?
அஞ்சல் அலுவலக ஃபிக்சட் டெபாசிட் (Post Office FD) திட்டத்தில் ரூ.25,000 முதலீடு செய்திருந்தால் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு என்பதை பார்க்கலாம்.
இந்தியாவில் பிரபலமான முதலீட்டுத் திட்டங்களில் அஞ்சல் அலுவலகம் சேமிப்புத் திட்டமும் ஒன்றாகும். தற்போது புது நிதியாண்டு தொடங்கிய நிலையில் வரிகளைச் சேமிக்கவும், சிறந்த வருமானத்தைப் பெறவும் நிலையான வைப்புத் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
அந்தவகையில், 1 வருடம், 2 வருடம், 3 வருடம் மற்றும் 5 வருடம் கொண்ட அஞ்சலக நிலையான வைப்புத் திட்டங்கள் உள்ளது.
அரசு உத்தரவின் படி உத்தரவாதமான வருமானத்தை வழங்குகிறது. Post Office Fixed Deposit Interest Rates ஆனது 1 வருடத்திற்கு 6.90%, 2 வருடத்திற்கு 7.00%, 3 வருடத்திற்கு 7.10% எனவும், 5 வருடத்திற்கு 7.50% எனவும் உள்ளது.
Post Office Fixed Deposit
தற்போது நாம் Post Office FD -ல் 1 வருடம், 2 வருடம், 3 வருடம் மற்றும் 5 வருட கால அளவுகளில் ரூ.25,000 முதலீடு செய்தால் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு என்பதை பார்க்கலாம்.
1. Post Office -ல் 1 வருட FD மூலம் ரூ.25,000 முதலீடு செய்தால் வட்டியாக ரூ.1,775 கிடைக்கும். இதனால், முதிர்வுத் தொகை ரூ.26,775 ஆக இருக்கும்.
2. Post Office -ல் 2 வருட FD மூலம் ரூ.25,000 முதலீடு செய்தால் வட்டியாக ரூ.3,722 கிடைக்கும். இதனால், முதிர்வுத் தொகை ரூ.28,722 ஆக இருக்கும்.
3. Post Office -ல் 3 வருட FD மூலம் ரூ.25,000 முதலீடு செய்தால் வட்டியாக ரூ.5,877 கிடைக்கும். இதனால், முதிர்வுத் தொகை ரூ.30,877ஆக இருக்கும்.
4.Post Office -ல் 5 வருட FD மூலம் ரூ.25,000 முதலீடு செய்தால் வட்டியாக ரூ.11,249 கிடைக்கும். இதனால், முதிர்வுத் தொகை ரூ.36,249 ஆக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |