Post Office திட்டத்தில் தினமும் ரூ.333 முதலீடு செய்தால்.., 5 வருடங்களில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?
தபால் நிலையத்தின் சிறு சேமிப்பு திட்டங்களில் ஒன்றான ரெக்கரிங் டெபாசிட் (Post Office Recurring Deposit) சேமிப்புத் திட்டத்த்தை பற்றி பார்க்கலாம்.
Post Office Recurring Deposit
தபால் நிலையத்தின் திட்டங்களில் சிறந்த வருமானத்தை தரும் திட்டங்களில் ஒன்று தான் ரெக்கரிங் டெபாசிட் (Post Office Recurring Deposit) சேமிப்பு திட்டம்.
இந்த திட்டத்தில் நீங்கள் மிக குறைந்த தொகையில் இருந்தே சேமிப்பை தொடங்கலாம். முக்கியமாக, இந்த திட்டத்தில் உங்களது பணம் பாதுகாப்பாக இருக்கும். இந்த திட்டத்தில் ரூ.100 மற்றும் அதற்கு மேல் (ரூ.10 இன் மடங்குகளில்) மாதாந்திர முதலீடுகளை செலுத்தலாம்.
Recurring Deposit கணக்குக்கான கால வரம்பு 5 ஆண்டுகள் ஆகும். ஒவ்வொரு காலாண்டு முடியும் போது கூட்டு வட்டியுடன் உங்களது கணக்கில் சேர்க்கப்படும். இந்த திட்டத்தில் 6.7% வட்டி (Interest) வழங்கப்படுகிறது.
ஒருவேளை நீங்கள் உங்களது RD கணக்கை நீடிக்க வேண்டும் என்று விரும்பினால் கூடுதலாக 5 ஆண்டுகள் தொடர்வதற்கான அனுமதியை பெறுவீர்கள். இதன் மூலமாக உங்களுடைய RD கணக்கின் மொத்த கால அளவு 10 வருடங்களாக மாற்றப்படும்.
தினமும் ரூ.333 முதலீடு
Post Office Recurring Deposit திட்டத்தில் தினமும் ரூ.333 முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் தோராயமாக ரூ.10,000 ஆகிறது. அதன்படி 5 ஆண்டு முடிவில் ரூ.6 லட்சம் டெபாசிட் செய்திருப்போம்.
இதற்கு வட்டி மட்டுமே உங்களுக்கு ரூ.1,13,659 கிடைக்கும். அந்தவகையில் 5 ஆண்டு முடிவில் முதிர்வு தொகையாக 7,13,659 கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |