ரூ.4 லட்சம் முதலீடு செய்தால் ரூ.4 லட்சம் வட்டி கிடைக்கும்.., Post Office -ன் அசத்தல் திட்டம் பற்றி தெரியுமா?
அஞ்சல் அலுவலகத்தில் பணத்தை இரட்டிப்பாக்கும் திட்டம் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Kisan Vikas Patra 2024
கிசான் விகாஸ் பத்ரா (Kisan Vikas Patra) திட்டம் என்பது அஞ்சலகத்தின் சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டத்தின் நோக்கமானது கிராமம் மற்றும் சிறிய நகரங்களில் உள்ள தனிநபர்களின் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பது ஆகும்.
இந்திய அரசால் தொடங்கப்பட்ட இந்த திட்டம் மூலம் 9.5 ஆண்டுகள் அல்லது 115 மாதங்களில் ஒரு முறை முதலீட்டை இரட்டிப்பாக்க உறுதியளிக்கிறது. இந்த திட்டமானது 7.5 % கூட்டு வருடாந்திர வருவாயின் நிலையான விகிதத்தை வழங்குகிறது.
இந்த திட்டத்தை ரூ.1000 முதலீட்டில் தொடங்கலாம். குறிப்பாக, 100 இன் மடங்குகளில் முதலீடு செய்ய வேண்டும்.
இந்த திட்டத்தின் மூலம் எந்தவொரு வயது வந்த தனிநபர் அல்லது கூட்டு (3 பெரியவர்கள் வரை) கணக்கைத் திறக்கலாம். 10 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகள் கணக்குகளைத் திறக்கலாம்.
மேலும், சிறார்கள் அல்லது மனநலம் குன்றியவர்கள் சார்பாக பாதுகாவலர்கள் கணக்குகளை திறக்கவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
முதலீடு
கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் முக்கியமாக நாம் பார்க்க வேண்டியது என்னவென்றால் அதன் இரட்டிப்பு அம்சமாகும். அதாவது, நம் முதலீடு தொகையானது முன்னரே தீர்மானிக்கப்பட்ட காலத்தில் இரட்டிப்பாகும்.
இதன் இரட்டிப்பு காலமானது 115 மாதங்கள் அல்லது தோராயமாக 9 ஆண்டுகள் மற்றும் 7 மாதங்கள் ஆகும்.
ஒரு முதலீட்டாளர் கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் 4 லட்சம் ரூபாயை முதலீடு செய்தால், முதிர்வு காலத்தில் அந்த தொகை இரட்டிப்பாகும். அதாவது முதலீட்டாளர்களுக்கு 8 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
தபால் அலுவலக இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, கிசான் விகாஸ் பத்ராவில் முதலீடு செய்யப்படும் தொகைக்கான வட்டி கூட்டு அடிப்படையில் கணக்கிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |