SBI Special RD திட்டத்தில் தினமும் ரூ.80 சேமித்தால்.., 3 ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?
பாரத ஸ்டேட் வங்கியின் சிறப்பு RD திட்டத்தில் தினமும் ரூ.80 சேமித்தால் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு என்பதை பார்க்கலாம்.
SBI Special RD திட்டம்
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கீழ் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையை முதலீடு செய்து அதிக அளவு நிதியை சேகரிக்க முடியும்.
எஸ்பிஐயின் ஹர் கர் லக்பதி திட்டத்தைப் (SBI’s Har Ghar Lakhpati scheme) பற்றி தான் பார்க்க போகிறோம். எஸ்பிஐயின் இந்தத் திட்டம் ஒரு தொடர் வைப்புத் திட்டம் அல்லது RD திட்டமாகும்.
இதில், வாடிக்கையாளர்கள் தங்கள் சிறுசேமிப்புகளை மாதந்தோறும் முதலீடு செய்து, லட்சக்கணக்கான மதிப்பிலான நிதியை சேகரிக்கலாம். இந்த திட்டத்தில் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இந்த திட்டத்தில் 3 முதல் 10 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம். இதில், ஒவ்வொரு மாதமும் உங்கள் சேமிப்பில் ஒரு பகுதியை தவறாமல் முதலீடு செய்ய வேண்டும். அதன் பிறகு உங்கள் பணம் வட்டியுடன் திருப்பித் தரப்படும்.
இத்திட்டத்தில் 10 வயது வரை உள்ள குழந்தைகளும் விண்ணப்பிக்கலாம். அதே நேரத்தில், மூத்த குடிமக்களும் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
வட்டி விகிதம்
ஹர் கர் லக்பதி திட்டம் முதிர்வு காலத்திற்கு ஏற்ப வெவ்வேறு வட்டி விகிதங்களைக் கொண்டுள்ளது. பொது குடிமக்களுக்கு வட்டி விகிதம் 6.75 சதவீதம் ஆகும்.
அதே சமயம் மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் 7.25 சதவீதம் ஆகும். எஸ்பிஐ ஊழியர் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால், அவருக்கு 8 சதவீதம் வரை வட்டி கிடைக்கும்.
தினமும் ரூ.80 முதலீடு
நாம் தினமும் ரூ.80 வரை சேமித்தால் மாதம் முழுவதும் ரூ.2500 சேமிக்கலாம். அதன்படி, பொது குடிமக்கள் 2500 ரூபாயை ஒவ்வொரு மாதமும் ஹர் கர் லக்பதி திட்டத்தில் 3 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். பின்னர், முதிர்வு தொகையாக நீங்கள் 1 லட்சம் ரூபாய் நிதியைச் சேர்க்கலாம்.
இதற்கு மாற்றாக, அதே வட்டி விகிதத்தில் நான்கு ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,810 முதலீடு செய்வதன் மூலம், ஒரு குடிமகன் ரூ.1 லட்சத்தை அடையலாம்.
அதேபோல, ஒரு மூத்த குடிமக்கள் 7.25% வட்டி விகிதத்தில் மூன்று ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.2,480 முதலீடு செய்தால், முதிர்வு காலத்தில் ரூ.1 லட்சத்தைப் பெறலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |