பிரான்ஸ் நீதித்துறை அமைச்சர் மீதே விசாரணை: மேக்ரான் அரசில் சர்ச்சை...
பிரான்ஸ் நீதித்துறை அமைச்சர் மீதே விசாரணை ஒன்று துவக்கப்பட உள்ள விடயம் பிரான்சில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
Eric சட்டத்தரணியாக இருந்தபோது, சர்ச்சைக்குரியவர்கள் பலர் சார்பில் வாதாடி அவர்களை விடுவித்துள்ளார்.
பிரான்ஸ் நீதித்துறை அமைச்சர் மீதே விசாரணை ஒன்று துவக்கப்பட உள்ள விடயம் மேக்ரான் அரசில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
பிரான்ஸ் நீதித்துறை அமைச்சரான Eric Dupond-Moretti, முன்பு பிரான்சின் மிகப்பிரபலமான கிரிமினல் சட்டத்தரணிகளில் ஒருவராக இருந்தவர் ஆவார்.
அதற்குப் பின்புதான் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான் அவரை நீதித்துறை அமைச்சராக்கினார்.
image - File
இந்நிலையில், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தனது தொழில்முறை எதிரிகளை பழிதீர்த்துக்கொண்டதாக தற்போது அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதை Eric மறுத்துள்ளதுடன், அவரது சார்பில் சட்டத்தரணிகள் மேல்முறையீடும் செய்துள்ளனர்.
Ericஉடைய பெயர் நீதித்துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டதும் பலர் அதிர்ச்சியடைந்ததோடு, சமூக ஊடகங்களில் மக்கள் கொந்தளித்தார்கள்.
Eric சட்டத்தரணியாக இருந்தபோது, சர்ச்சைக்குரியவர்கள் பலர் சார்பில் வாதாடி அவர்களை விடுவித்துள்ளார்.
வரி ஏய்ப்பும் பண மோசடியும் செய்து சிறைக்கு சென்ற ஒருவர், சக பெண் விளையாட்டு வீராங்கனைகளை வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர், தீவிரவாதி ஒருவனின் சகோதரன் என பலரை Eric வாதாடி விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.