சுவிட்சர்லாந்தில் கூட்டத்துக்குள் வேண்டுமென்றே காரை செலுத்திய நபர்: 5 ஆண்டுகள் சிறை செல்லலாம்
சுவிட்சர்லாந்தில், பாலஸ்தீன ஆதரவு பேரணி ஒன்றின்போது, வேண்டுமென்றே கூட்டத்துக்குள் காரை செலுத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கூட்டத்துக்குள் வேண்டுமென்றே காரை செலுத்திய நபர்
ஞாயிற்றுக்கிழமை இரவு, சுவிட்சர்லாந்தின் லோசான் நகரில் பாலஸ்தீன ஆதரவு பேரணி ஒன்று நடந்துகொண்டிருந்தது.
வாகனங்கள் பலவற்றை பொலிசார் நிறுத்திவைத்திருந்த நிலையில், ஒரு கார் அந்த வாகனங்கள் எல்லாவற்றையும் முந்திக்கொண்டு முன்னேறியுள்ளது.
Keystone-SDA
சுமார் 2,000 பேர் கூடியிருந்த அந்த கூட்டத்தை நெருங்கியதும், அந்தக் கார் திடீரென வேகம் அதிகரித்து கூட்டத்துக்குள் நுழைந்துள்ளது.
மக்கள் அதிர்ச்சியடைந்தாலும், ஒன்றுதிரண்டு அந்தக் கார் முன்னேறாமல் தடுத்துள்ளார்கள். இந்த சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளார்கள்.
பொலிசார் அந்தக் காரை இயக்கிய 56 வயது நபரைக் கைது செய்துள்ளார்கள். அவர் எந்த நாட்டவர் என்பது போன்ற விவரங்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில், மக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுபவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம் என்னும் சுவிஸ் சட்டப்படி அந்த நபர் சிறை செல்லலாம் அல்லது அவருக்கு அபராதம் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.