தமிழகத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து சதியா? தீவிரமடையும் விசாரணை
தமிழகத்தின் குன்னூரில் விபத்தில் சிக்கிய எம்.ஐ.17 வி5 ரக ஹெலிகாப்டர் விபத்து தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுல்லிக்கா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏனெனில் விபத்துக்குள்ளான எம்.ஐ.17 வி5 ரக ஹெலிகாப்டர் முக்கிய வி.வி.ஐ.பிக்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஒரு ஹெலிகாப்டர் ஆகும்.
ஏனென்றால் இந்த ஹெலிகாப்டர் மிகவும் பாதுகாப்பானது என்பதால் முக்கிய வி.வி.ஐ.பி.க்கள் தாங்கள் செல்வதற்கு இதனையே பயன்படுத்தி வந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி பொதுவாகவே இந்த ஹெலிகாப்டர் புறப்படுவதற்கு முன்பு கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படும்.
அந்த வகையில் முப்படை தலைமை தளபதி புறப்பட்ட இந்த எம்.ஐ.17 வி.5 ரக ஹெலிகாப்டரும் பரிசோதிக்கப்பட்டது.
அப்படியிருந்தும் விபத்தில் சிக்கியுள்ளதால், இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மிக முக்கியமாக இதற்கு முன்பு, எம்.ஐ.17 வி5 ரக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது கிடையாது, அதி நவீன தொழில் நுட்பங்களை கொண்ட இந்த ஹெலிகாப்டரில் பாதுகாப்பு அம்சத்தில் குறைபாடு ஏற்படுவது என்பது மிகவும் குறைவு என சொல்லப்படுகிறது.
மேலும் பனி மூட்டத்திலும் எளிதாக கடந்து செல்லக்கூடிய ஹெலிகாப்டர் என்பதால் இந்த விபத்து தற்செயலாக நடந்ததா? அல்லது ஏதாவது சதியா? என்பது தெரியவில்லை.
உயிரிழந்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் நாட்டின் பாதுகாப்புக்காக சில வேலைகளை கையில் எடுத்திருந்ததாகவும், அதனால் இது வெளிநாட்டு அமைப்புகளின் சதி திட்டமாக இருக்குமோ? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.
அந்த கோணத்திலும் ராணுவ அதிகாரிகளின் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே ஹெலிகாப்டரில் என்ன நடந்தது என தெரிய வேண்டும் என்றால் அதில் இருந்த கருப்பு பெட்டி கிடைத்தால் மட்டுமே தெரியவரும்.