அன்று வெறும் 14 ரூபாய் இல்லாதவர்.., இன்று ரூ.800 கோடிக்கு சொந்தக்காரர்: யார் அவர்?
கடினமான பாதைகளை கடந்து வந்து புகழ்பெற்ற முதலீட்டாளராக மாறியுள்ள கோடீஸ்வரரை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
யார் அவர்?
கொல்கத்தாவில் மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர் விஜய் கேடியா (vijay kedia). இவரது தந்தை ஒரு ஸ்டாக் ப்ரோக்கர். இவர், பத்தாம் வகுப்பு படிக்கும்போதே தந்தை இறந்து விட்டதால், குடும்பம் பெரிய நிதி நெருக்கடியில் சிக்கியது.
இதனால் குடும்ப பொறுப்பினை விஜய் கேடியா ஏற்றுக்கொண்டார். தன்னுடைய 19 வயதிலே பங்குச்சந்தையில் இறங்கிய இவர், பெரும் நஷ்டத்தை சந்தித்தார்.
அப்போது, அவரது குழந்தைக்கு பால் வாங்குவதற்கு கூட பணம் இல்லாமல் இருந்துள்ளார். அதே நேரத்தில் ஒரு பால் பாக்கெட்டின் விலை ரூ.14.
இந்த நிலைமையை சரிசெய்ய வேண்டும் என்று கொல்கத்தாவில் இருந்து மும்பைக்கு 1990 -ம் ஆண்டில் சென்றார்.
இதையடுத்து 1992 -ம் ஆண்டில் இந்திய பங்குச் சந்தை பெரும் வளர்ச்சியை கண்டது. அந்த நேரத்தில் வர்த்தகத்தில் இறங்கி கணிசமான தொகையை பெற தொடங்கினார்.
இவர், கொல்கத்தாவை சேர்ந்த பஞ்சாப் டிராக்டர் நிறுவனத்தின் பங்குகளை ரூ.35 ஆயிரத்திற்கு வாங்கி இருந்தார். அப்போது, பங்கு சந்தை வளர்ச்சியடைந்ததால் இதன் பங்கு மதிப்பு 5 மடங்காக உயர்ந்தது.
இதனை விற்றுவிட்டு ஏசிசி நிறுவனத்தின் பங்குகளை வாங்கினார். இந்த பங்கின் மதிப்பு ஓராண்டிலே 10 மடங்காக உயர்ந்தது.
பின்னர், இதன் மூலம் வந்த பணத்தை வைத்து மும்பையில் சொந்தமாக வீடு வாங்கினார். தனது குடும்பத்தையும் கொல்கத்தாவில் இருந்து மும்பைக்கு வரவைத்தார்.
இதையடுத்து, 2022 -ம் ஆண்டு சியாராம்ஸ் மில்க் நிறுவனத்தில் 1.1% பங்குகளை வாங்கினார். தற்போது, 800 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை விஜய் கேடியா சொந்தமாக வைத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |