ஒரே ஒரு நிறுவனம்... 5 நாட்களில் ரூ 32,000 கோடி சம்பாதித்த முதலீட்டாளர்கள்: ரிலையன்ஸ், டிசிஎஸ் அல்ல
கடந்த வாரம் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் பலர் கடும் நெருக்கடியை எதிர்கொள்ள, இந்தியாவில் மிக உயர்ந்த மதிப்புள்ள நிறுவனங்கள் தங்கள் சந்தை மதிப்பில் பெரும் சரிவைக் கண்டன.
பொருளாதார மந்தநிலை
முதல் 10 நிறுவனங்களில் எட்டு நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ1.28 லட்சம் கோடிக்கும் அதிகமாக சரிவைக் கண்டது. சர்வதேச சந்தையில் பொருளாதார மந்தநிலை தொடர்பான அச்சம் பரவியதை அடுத்து TCS, இன்ஃபோசிஸ் உட்பட மென்பொருள் ஜாம்பவான்களும் பெரும் இழப்பை எதிர்கொண்டனர்.
ஆனால் HDFC வங்கியின் சந்தை மதிப்பு மட்டும் ரூ 32,759 கோடி அதிகரித்து, ரூ 12,63,601 கோடி என பதிவானது. மட்டுமின்றி LIC நிறுவனத்தின் சந்தை மதிப்பும் ரூ 1,075 கோடி அதிகரித்து ரூ 747,677 கோடி என பதிவானது.
ஜூலை 29 திங்கட்கிழமை HDFC வங்கியின் பங்குகள் ரூ 1616.40 என வர்த்தகமானது. அன்று வர்த்தகம் முடிவடையும் போது HDFC வங்கியின் பங்கு ஒன்றின் விலை ரூ 1658.05 என பதிவாகியிருந்தது.
HDFC வங்கி
வெறும் 5 நாட்களில் HDFC வங்கியின் பங்கானது 2.58 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதனால் HDFC வங்கியின் முதலீட்டாளர்கள் ரூ 32,759 கோடி அளவுக்கு சம்பாதித்துள்ளனர்.
ஆனால் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் பெரும் நிறுவனங்கள் பல சுமார் ரூ 4 லட்சம் கோடி அளவுக்கு இழப்பை சந்தித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |