விஜய் பங்கேற்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவிற்கு என்னையும் கூப்பிட்டாங்க.., சீமான் பேச்சு
அம்பேத்கர் பற்றிய புத்தகத்தை தவெக தலைவர் விஜய் வெளியிட்டது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
சீமான் பேசியது
சென்னை நந்தம்பாக்கத்தில் நேற்று அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "நேற்று நடைபெற்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவுக்கு என்னையும் அழைத்தனர். அதேபோல, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரையும் அழைத்தனர்.
அம்பேத்கர் புத்தகத்தை விசிக தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்டு நான் பெற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அம்பேத்கரை பற்றி பேசுவதற்கு எனக்கு யாரும் மேடை அமைத்து தர வேண்டியதில்லை.
தம்பி விஜய், அம்பேத்கர் புத்தகத்தை வெளியிடுவதை நான் வரவேற்கிறேன்.அம்பேத்கரை மக்கள் மத்தியில் யார் கொண்டு சேர்த்தாலும் மகிழ்ச்சி தான்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |