பகிரப்பட்ட அந்தரங்க காணொளி... மூன்று ரியல் மாட்ரிட் வீரர்கள் கைது
சிறார் தொடர்பான துஸ்பிரயோக காணொளி ஒன்று பகிரப்பட்ட சம்பவத்தில் பெயர் குறிப்பிடப்படாத மூன்று ரியல் மாட்ரிட் வீரர்களை ஸ்பெயின் பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மூன்று கால்பந்து வீரர்கள்
குறித்த கைது நடவடிக்கையானது ஸ்பானிய கால்பந்தில் பாலியல் மற்றும் ஆண்களின் நடத்தை பற்றிய கோபத்தை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
கைதைத் தொடர்ந்து, அவர்களின் அலைபேசியில் இருந்து தரவுகளை கைப்பற்றிய பின்னர், அந்த மூன்று கால்பந்து வீரர்களையும் விடுவித்துள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
@Shutterstock
கேனரி தீவுகளை சேர்ந்த அந்த 16 வயது பெண்ணின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையே கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளை காணொளியாக பதிவு செய்ததாகக் கூறியே தாயார் புகார் அளித்துள்ளார்.
16 வயது பெண்
கால்பந்து வீரர்களுடன் நெருக்கமாக இருக்க அந்த பெண் ஒப்புக்கொண்டிருந்தாலும், அதை காணொளியாக பதிவு செய்ய அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது.
ஜூன் மாதம் நடந்த இச்சம்பவம் தொடர்பில், குறித்த 16 வயது பெண் தற்போதே தெரிந்துகொண்டார் எனவும், அதன் பின்னரே புகார் அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, ரியல் மாட்ரிட் நிர்வாகம் தெரிவிக்கையில், இளைஞர் அணியினை சேர்ந்த நான்கு வீரர்கள் பொலிசாரால் விசாரிக்கப்பட்டதாகவும், அதில் மூவர் கைதானதாகவும் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |