பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளராக இன்ஸமாம் உல் ஹக் நியமனம்
பாகிஸ்தான் ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளராக முன்னாள் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தலைமை தேர்வாளர்
முன்னாள் வீரர்களான இன்ஸமாம் உல் ஹக், மிஸ்பா, முகமது ஹபீஸ் போன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தொழில்நுட்பக் குழுவானது புதிய தேசிய தேர்வுக் குழுவை அமைப்பது குறித்து ஆலோசித்து வருகிறது.
இதில் முன்னாள் கேப்டனான இன்ஸமாம் உல் ஹக் மீண்டும் தலைமை தேர்வாளர் பதவியை தொடர ஒப்புதல் அளித்ததாக செய்தி வெளியானது.
Former Pakistan captain Inzamam ul Haq has been appointed national men's chief selector. pic.twitter.com/TnPdQaoXvW
— Pakistan Cricket (@TheRealPCB) August 7, 2023
மீண்டும் இன்ஸமாம் தலைவர்
இந்நிலையில், அவர் 2016ஆம் ஆண்டு முதல் 2019 வரை பதவி வகித்த இன்ஸமாம் தேசிய ஆடவர் அணியின் தலைமை தேர்வாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கான அணியை அறிவித்த இன்ஸமாம், தற்போது 2023 உலகக்கோப்பை அணியையும் அறிவிக்க உள்ளார்.
இதற்கிடையில் அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர் மற்றும் தலைமை பயிற்சியாளர் கிராண்ட் பிராட்பர்ன் ஆகியோரும் தெரிவுக்குழுவில் உள்ளனர். ஆனால் அவர்களின் நிலை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
பாகிஸ்தான் அணியின் தொடர்ச்சியான சீரற்ற ஆட்டங்களுக்கு பிறகு மீண்டும் எழுச்சி பெறும் நேரத்தில் இன்ஸமாம் தேர்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |