விற்பனை தொடங்கிய ஆரம்பத்திலேயே iPhone 16 Pro போனில் Touchscreen பிரச்சனை?
ஐபோன் 16 புரோ (iPhone 16 Pro) மற்றும் புரோ மேக்ஸ் (iPhone 16 Pro max) போன்களில் டச் ஸ்க்ரீன் பிரச்சனையை (Touchscreen) எதிர்கொள்வதாக பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
Touchscreen பிரச்சனை
ஐபோன் 16 புரோ மற்றும் புரோ மேக்ஸ் போன்களில் டச் ஸ்க்ரீன் பிரச்சினையை எதிர்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது என்று ஆப்பிள் சாதனங்கள் குறித்து செய்தி வெளியிடும் 9டு5 மேக் (9to5Mac) நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்வதேச சந்தையில் iPhone 16 Pro சீரிஸ் மொடல் போன்கள் விற்பனைக்கு வந்தது.
பின்னர், கடந்த 20 -ம் திகதி அன்று இந்தியாவில் iPhone 16 Pro சீரிஸ் மொடல் போன்கள் விற்பனைக்கு வந்தது.
இந்நிலையில், ஐபோன் 16 புரோ (iPhone 16 Pro) மொடல் போன்களின் டச் ஸ்க்ரீன் (Touchscreen) சரியாக வேலை செய்யவில்லை என்று பயனர்கள் சமூக வலைதளங்களில் புகார் தெரிவித்துள்ளனர். இ
தனால், தங்களுடைய போன்களை கையாளுவதில் சிக்கலை சந்திப்பதாக கூறியுள்ளனர். அதாவது டச் ஸ்க்ரீனை தொட்டால் அதனுடைய ரெஸ்பான்ஸ் மிகவும் தாமதமாக உள்ளதாகவும், இல்லையென்றால் ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.
இந்நிலையில் இது Hardware சார்ந்த பிரச்சனையாக இருக்க வாய்ப்பில்லை என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அதே நேரத்தில் பயனர் ஒருவர் Camera control button அருகே தொடும் போது தான் இந்த பிரச்சனையை சந்திப்பதாக கூறியுள்ளார். இதற்கு, Software சார்ந்த Updates மூலம் தீர்வு காணலாம் என வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |