இந்தியாவில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்: Apple iPhone 16 சாதனை
ஆப்பிள் நிறுவனத்தின் iPhone 16, 2025-ல் இந்தியாவில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போனாக சாதனை படைத்துள்ளது.
2025 ஜனவரி முதல் நவம்பர் வரை 11 மாதங்களில் 6.5 மில்லியன் யூனிட்கள் விற்பனையாகி, இந்தியாவின் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போனாக iPhone 16 உயர்ந்துள்ளது.
Counterpoint Research வெளியிட்ட அறிக்கையின்படி, iPhone 16, Vivo, Samsung, Oppo போன்ற ஆண்ட்ராய்டு பிராண்டுகளை முந்தி முதலிடத்தை பிடித்துள்ளது.
மேலும், iPhone 15 கூட இந்தியாவின் Top 5 best-selling smartphones பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

இந்த வெற்றிக்கு முக்கிய காரணங்கள்:
உள்நாட்டு உற்பத்தி விரிவாக்கம்: ஆப்பிள் இந்தியாவில் உற்பத்தியை அதிகரித்து, சீனாவை சார்ந்திருப்பதை குறைத்துள்ளது.
புதிய Apple Stores: பெங்களூரு, புனே, நோய்டா ஆகிய நகரங்களில் மூன்று புதிய ஸ்டோர்கள் திறக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், இந்தியாவில் மொத்தம் 5 ஸ்டோர்கள் செயல்படுகின்றன.
சலுகைகள்: No-cost EMI, cashback, exchange offers போன்ற திட்டங்கள் விற்பனையை ஊக்குவித்துள்ளன.
ஏற்றுமதி சாதனை: 2025 நவம்பரில் மட்டும் 2 பில்லியன் டொலர் மதிப்பிலான iPhone-களை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்துள்ளது.
iPhone 16-ன் இந்த சாதனை, இந்தியாவில் பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு அதிகரிக்கும் தேவை மற்றும் ஆப்பிளின் வலுவான சந்தைத் திட்டம் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |