செப்டம்பரில் அறிமுகமாகும் iPhone 17 Series: டிஸ்ப்ளே, கமெரா, ரேம் அப்டேட்
Apple நிறுவனம் தனது புதிய iPhone 17 தொடரை 2025 செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் அறிமுகப்படுத்தும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
புகழ்பெற்ற தகவலாளர் மார்க் குர்மன் கூறியிருப்பதன் அடிப்படையில், இது செப்டம்பர் 9 அல்லது 10-ஆம் திகதி நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய A19 சிப்கள் மற்றும் மேம்பட்ட செயல்திறன்
iPhone 17 மற்றும் Pro மொடல்களில் TSMC-ன் 3nm தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட A19 மற்றும் A19 Pro சிப்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் செயல்திறன் அதிகரிக்கிறது.
iPhone 17 மொடல்களில் 8GB RAM, Pro மொடல்களில் 12GB RAM என அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
டிஸ்ப்ளே அளவுகளில் மாற்றம்
iPhone 17 – 6.3 அங்குலம்
iPhone 17 Air – 6.7 அங்குலம்
iPhone 17 Pro – 6.3 அங்குலம்
iPhone 17 Pro Max – 6.9 அங்குலம்
கமெரா அமைப்புகள்
iPhone 17 – 48MP வைடு, 12MP அல்ட்ரா வைடு, 24MP செல்ஃபி
iPhone 17 Air – 48MP பின் கமெரா, 24MP முன் கமெரா
மொடல் வகைகளுக்கேற்ப கமெரா அம்சங்களில் வேறுபாடு உள்ளது.
Pro பயனாளர்களுக்கான அதிக ரேம்
12GB RAM உடன் Pro மொடல்கள் பல தொழில்நுட்ப விருப்பங்களை ஆதரிக்க முடியும். அதிக செயல்திறன் மற்றும் சிறந்த மெமரியுடன், மல்டிடாஸ்கிங்கில் முன்னேற்றம் ஏற்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
iPhone 17 release date India 2025, iPhone 17 Pro Max display size, iPhone 17 camera specs leak, A19 chip performance, iPhone 17 Air specs, iPhone 17 RAM upgrade, Apple September event 2025