காபி, ஊதா, பர்கண்டி., புதிய வண்ணங்களில் iPhone 18 Pro அறிமுகம்
அப்பிள் நிறுவனம் 2026-ல் அறிமுகமாகவுள்ள iPhone 18 Pro மொடலுக்கு புதிய வண்ண விருப்பங்களை வழங்க திட்டமிட்டுள்ளது.
அதாவது, காபி, ஊதா மற்றும் பர்கண்டி (Coffee, Purple, Burgundy) ஆகிய தனித்துவமான நிறங்கள் வழங்க உள்ளது. இந்த தகவலை பிரபல சீன லீக்கர் Instant Digital வெளியிட்டுள்ளார்.
புதிய நிறங்கள், iPhone 17 Pro மொடலில் வந்த Silver, Deep Blue மற்றும் Cosmic Orange போன்ற நிறங்களைத் தொடர்ந்து, வழக்கமான கருப்பு அல்லது சாம்பல் நிறங்களை தவிர்க்கும் புதிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, 'காபி' என்பது ஒரு ஆழமான பழுப்பு நிறம், பூமி போன்ற தோற்றத்துடன் இருக்கும். 'பர்கண்டி' என்பது சிவப்பு மற்றும் ஊதா கலவையுடன் கூடிய, மது போன்ற தோற்றம் கொண்ட நிறம்.

iPhone 18 Pro மொடலில் தொழில்நுட்ப மேம்பாடுகளும் எதிர்பார்க்கப்படுகின்றன.
இதில் TSMC நிறுவனத்தின் 2nm தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் A20 chip, variable aperture கொண்ட Primary Camera, புதிய C2 modem மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட Camera Control button ஆகியவை இடம்பெறலாம்.
மேலும், iOS 26.1 அப்டேட்டும் விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 'Liquid Glass' எனப்படும் புதிய interface மாற்றம், Lock Screen-ல் Camera App-ஐ திறக்கும் swipe gesture விருப்பம் உள்ளிட்ட பல புதிய அம்சங்கள் சேர்க்கப்படலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
iPhone 18 Pro new colors 2026, Apple coffee burgundy iPhone leak, iPhone 18 Pro color options, iOS 26.1 Liquid Glass feature, Apple Camera swipe toggle iOS, A20 chip TSMC 2nm iPhone specs, iPhone 18 Pro design changes, Apple fall 2026 iPhone launch, Instant Digital iPhone leak, iPhone 17 Pro vs iPhone 18 Pro