இந்திய iPhone பயனர்களுக்கு ஆபத்து: அரசு உயர் பாதுகாப்பு எச்சரிக்கை வெளியீடு
iPhone மற்றும் iPad பயனர்கள் கடும் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளதாக இந்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய கணினி அவசரத் தீர்வு குழு (CERT-In), Apple iOS மற்றும் iPadOS-இல் காணப்படும் பல பாதுகாப்பு குறைகள் குறித்து கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த குறைகள் iOS 18.3-க்கு முந்தைய பதிப்புகளை இயக்கும் iPhone-களிலும், iPadOS 17.7.3 அல்லது 18.3-க்கு கீழ் இயங்கும் iPad-களிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
iPhone XS மற்றும் அதற்கு மேலான மாடல்களும், iPad Pro (2nd Gen+) மற்றும் iPad 6th Gen+, iPad Air 3rd Gen+, iPad Mini 5th Gen+ ஆகியவற்றும் இதில் அடங்கும்.
முக்கியமான குறைபாடுகளில் ஒன்று Darwin Notification System-இல் உள்ளது. இது சாதாரண அனுமதிகள் இல்லாத செயலிகளுக்கும், கணினி நிலை அறிவிப்புகளை அனுப்ப வாய்ப்பு அளிக்கிறது. இது சாதனத்தை முடக்கும் நிலைக்கு கொண்டு செல்லும் அபாயத்தையும் ஏற்படுத்துகிறது.
என்ன செய்ய வேண்டும்?
Apple நிறுவனம் இந்த குறைகளை சரிசெய்யும் புதுப்பிப்புகளை வெளியிட்டுள்ளது. எனவே, அனைத்து பயனர்களும் உடனடியாக iOS/iPadOS-இன் புதிய பதிப்பிற்கு புதுப்பிக்க வேண்டும்.
மேலும், சரிபாராத செயலிகளை நிறுவுவதைத் தவிர்க்கவும், சாதனத்தில் ஏதேனும் அசாதாரண நடத்தை தெரிய வந்தால் அதனை கவனிக்கவும் வேண்டும்.
இன்றைய டிஜிட்டல் உலகில் பாதுகாப்பாக இருக்க, புதுப்பிப்புகள் மற்றும் விழிப்புணர்வு மிக முக்கியம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
iPhone vulnerability India, CERT-In Apple alert, iOS security update, iPhone hack risk, Apple India warning, iOS 18.3 update, iPadOS vulnerability, iPhone XS bug fix, Apple data breach India, Apple security patch