வெடித்து சிதறிய ஐபோன்.. இரண்டு துண்டானது
உத்திரபிரதேசத்தில் தொழிலதிபரின் பாக்கெட்டில் இருந்த ஐபோன் வெடித்து இரண்டு துண்டான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அலிகாரைச் சேர்ந்தவர் பிரேம் ராஜ் சிங்(48), ரியல் எஸ்டேட் தொழிலதிபரான இவர், தனது பேண்ட் பாக்கெட்டில் ஐபோனை வைத்திருந்தார். தனது போன் சூடாகுவதை உணர்ந்தார்.
பின் போனிலிருந்து புகை வெளியேற ஆரம்பித்தது. ஐபோனை பாக்கெட்டிலிருந்து வெளியில் எடுக்கும் முன்பே அது பயங்கர சத்தத்துடன் வெடித்ததாக கூறப்படுகிறது.
இதில் பிரேம் ராஜ் சிங்கிற்கு இடது தொடை மற்றும் கட்டை விரலில் தீக்காயம் ஏற்பட்டது.இதனையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து பிரேம் ராஜ் சிங் ''என் பாக்கெட்டில் இருந்த ஐபோன் சூடாகியது பின் நான் அதை வெளியே எடுத்தேன் பின் அது பயங்கர சத்தத்துடன் வெடித்து இரண்டு துண்டாக உடைந்தது'' என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |