ஆப்பிள் உற்பத்தியை அமெரிக்காவிற்கு மாற்றுகிறது என்றால் iPhone விலை என்னவாக இருக்கும்
இந்தியாவுடன் ஒப்பிடும்போது ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் ஐபோன்களை உற்பத்தி செய்யத் தொடங்கினால், அதன் விலை 3,000 டொலர் என இருக்கும் என்று தொழில்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மூன்று மடங்கு அதிகம்
இது தற்போதைய ஐபோனின் விலையான 1,000 அமெரிக்க டொலர்களை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம் என்று, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அறிக்கைக்கு பதிலளித்த தொழில்துறைத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்குடன் பேசியதாகவும், இந்தியாவில் ஆப்பிளின் விரிவாக்கத்தைக் கட்டுப்படுத்துமாறு கேட்டுக் கொண்டதாகவும் கூறியதைத் தொடர்ந்து இந்த எதிர்வினைகள் வெளிவந்துள்ளன.
ட்ரம்பின் கருத்து தொடர்பில் பதிலளித்துள்ள மராத்தா வர்த்தகம், தொழில்கள் மற்றும் வேளாண்மை சபையின் (MCCIA) இயக்குநர் ஜெனரல் பிரசாந்த் கிர்பேன், சீனா, இந்தியா அல்லது வியட்நாம் போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் தயாரிக்க முடிவு செய்தால், 1,000 டொலர் மதிப்புள்ள ஐபோன் 3,000 டொலர் விலையில் விற்க வேண்டிய சூழல் ஏற்படும்.
அமெரிக்க நுகர்வோர் அந்த ஐபோனுக்கு 3,000 டொலர் செலவிடத் தயாரா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஆப்பிள் நிறுவனத்தின் 80 சதவீத உற்பத்தி சீனாவில் நடைபெறுகிறது என்றும், அங்கு சுமார் 5 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
22 பில்லியன் டொலர்
மட்டுமின்றி, ஆப்பிள் நிறுவனத்தின் விரிவாக்கம் என்பது, சீனாவில் இருந்து இந்தியாவுக்கு என்றும், உற்பத்தி மற்றும் வேலை வாய்ப்புகள் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, அமெரிக்க நிறுவனங்களும் நுகர்வோரும் வர்த்தக ரீதியாக தங்களுடன் மிகவும் நட்பாக இல்லாத ஒரு நாட்டின் மேலாதிக்கத்திலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள் என்றும் பிரசாந்த் கிர்பேன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்தைப் பொறுத்தவரை, கடந்த ஒரு வருடத்தில் இந்தியாவில் இருந்து 22 பில்லியன் டொலர் மதிப்புள்ள ஐபோன்களை அவர்கள் தயாரித்துள்ளனர். ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் மூன்று உற்பத்தி வசதிகளைக் கொண்டுள்ளது, மேலும் இரண்டு உற்பத்தி வசதிகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.
ஆப்பிள் ஏற்கனவே தனது உற்பத்தியை ஓரளவு சீனாவிலிருந்து இந்தியாவிற்கு மாற்றியிருந்தது. ஆப்பிள் நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறினால், அது பெரிய இழப்புகளைச் சந்திக்கும், ஏனெனில் உலகளவில் வரி கட்டுப்பாடுகள் வரவுள்ளன, மேலும் அவை அடிக்கடி மாற்றங்களுக்கு உட்பட்டவை நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |