ஐபோன் 13-ல் உள்ள அதே சிப்புடன் புதிய iPhoneSE அறிமுகம்!
Apple இறுதியாக அதன் புதிய பட்ஜெட் ஐபோன் மொபைல் மாடலாக iPhone SE (2022) இறுதியாக நேற்று நடந்த ஆப்பிள் நிகழ்வில் வெளியிடப்பட்டது.
புதிய iPhone SE 3 ஏப்ரல் 2020-ல் அறிமுகப்படுத்தப்பட்ட iPhone SE 2 (2020) மேம்படுத்தப்பட்ட மாடலாகும். அதாவது, முந்தைய மாடல் (iPhone SE 2) 4G ஆதரவு மற்றும் A13 பயோனிக் சிப் உடன் வந்த நிலையில், புதிய iPhone SE (2022) 5G இணைப்பை வழங்குகிறது மற்றும் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட A15 பயோனிக் சிப் மூலம் இயக்கப்படுகிறது.
iPhone SE (2022) மேம்படுத்தப்பட்ட பின்புற கேமராவையும் கொண்டுள்ளது. மூன்று முக்கிய வன்பொருள்-நிலை மேம்படுத்தல்களுடன், புதிய iPhone SE 3 கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட அதே வடிவமைப்பில் வருகிறது.
இந்தியாவில் iPhone SE (2022) விலை:
இந்தியாவில் iPhone SE (2022) விலை 64ஜிபி மாடலுக்கு ரூ.43,900. 128 ஜிபி வேரியண்ட் ரூ. 48,900 மற்றும் 256 ஜிபி வேரியண்ட் ரூ. முறையே 58,900 என் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவில், iPhone SE (2022) $429 இல் (தோராயமாக ரூ. 33,000) தொடங்குகிறது.
Photo Credit:Apple
புதிய iPhone SE மிட்நைட், ஸ்டார்லைட் மற்றும் சிவப்பு வண்ணங்களில் வருகிறது.
புதிய iPhone SE (2022) உடன், Apple iPhone 13 தொடரில் புதிதாக பச்சை நிறத்தில் (Alpine Green) ஒரு மொடலை அறிமுகப்படுத்தியுள்ளது.