புது ஐபோன் SE மாடல் வெளியீட்டு விவரம்! இணையத்தில் வெளியாகிய மகிழ்ச்சி தகவல்
ஐபோன் 13 சீரிஸ் வரிசையில் தற்போது புதிய ஐபோன் SE விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
புதிய ஐபோன் SE அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகின்றது.
முன்னதாக புதிய ஐபோன் SE மேம்பட்ட பிராசஸர் கொண்டிருக்கும் என வல்லுநர்கள் தெரிவித்தனர்.
ஆனால் அம்சங்களை பொருத்தவரை ஐபோன் SE 2022 மாடலில் ஆப்பிள் ஏ14 பயோனிக் சிப்செட் வழங்கப்பட இருக்கிறது.
ஐபோன் SE 2022 குறைந்த விலை 5ஜி ஐபோன் என விளம்பரப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. புதிய ஐபோன் SE மாடலில் 4.7 இன்ச் டிஸ்ப்ளே, பெசல்கள், டச் ஐடி சென்சார் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.