ஐபோன் ட்ரிக்ஸ்: ஷார்ட்கட் பயன்படுத்தி குறிப்பிட்ட ஆப்களை லாக் செய்வது எப்படி?
ஐபோனில் இன்பில்ட்டாகவே இருக்கும் ஷார்ட்கட் ஆப்பை பயன்படுத்தி, பயனர்கள் தனிப்பட்ட ஆப்களை எளிதாக லாக் செய்துகொள்ள முடியும்.
Apple-ன் ஐபோன் பயனர்கள் iOS 16.4 அப்டேட்டுக்குப் பிறகு ஷார்ட்கட் மூலம் முக்கியமான ஆப்களுக்கான பாதுகாப்புச் சுவரை உருவாக்கலாம். ஆப்களுக்கான திரை வரம்பை அமைப்பதை விட இது எளிதான மாற்றாக இருக்கும் என கூறப்படுகிறது.
Apple
ஐபோனில் ஆப்களை லாக் செய்வதற்கு ஷார்ட்கட்களை எவ்வாறு பயன்படுத்துவது? என்பதை படிப்படியாக பார்க்கலாம்
1- ஐபோனில் ஷார்ட்கட் ஆப்ஸைத் திறக்கவும். உங்கள் போன் சமீபத்திய iOS அப்டேட்டுகள் நிறுவப்பட்டுள்ளதை உறுதிசெய்யவும்
2- கீழ் பேனலில் உள்ள 'ஆட்டோமேஷன்' பட்டனை கிளிக் செய்யவும்
3- '+' பொத்தானைக் கிளிக் செய்து, பின்னர் 'Create personal automation' என்பதைக் கிளிக் செய்யவும்
iPhone Screenshot
4- இப்போது கீழே ஸ்க்ரோல் செய்து 'App' என்பதை க்ளிக் செய்யவும்
5- 'Is Opened' என்பதைத் தேர்ந்தெடுத்து, 'Choose' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
6- லாக் செய்யப்படவேண்டிய ஆப்களை தேர்ந்தெடுத்து, 'Done' என்பதைக் கிளிக் செய்யவும்
7- 'Next' என்பதைத் தட்டவும், பின்னர் 'Add Action' என்பதைக் கிளிக் செய்யவும்
8- பின்னர், அங்கு 'Lock screen' என டைப் செய்து, 'Ask before running' என்ற பட்டனை மாற்றி, செயலை முடிக்க 'Don’t ask' என்பதை அழுத்தவும்
iPhone Screenshot