iphone யூசர்களின் வங்கி கணக்கில் பணம் காணாமல் போகலாம்- அரசின் எச்சரிக்கை
இப்போது ஹேக்கர்கள் தொல்லை அதிகரித்துவிட்டதால் Smartphone யூசர்கள் விழிப்புடன் இருப்பது அவசியம்.
அந்த வகையில் தற்போது Apple மொபைல் யூசர்களுக்கு அரசிடம் இருந்து எச்சரிக்கை வந்திருக்கிறது.
அதில் iPhone மற்றும் Mac பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்படலாம் மற்றும் Bank கணக்குகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
எனவே, iPhone மற்றும் Mac பயனர்கள் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Apple நிறுவனம் கொடுத்திருக்கும் பாதுகாப்பு வழிமுறைகளை அவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
என்ன செய்ய வேண்டும்?
உங்களின் Smartphone-ஐ எப்போதும் Update செய்து வைத்திருங்கள். Update செய்வதால் ஹேக்கர்கள் உங்கள் Data-வை திருடுவதை கடினமான வேலியாக அமைகின்றன.
உங்கள் Location-ஐ எப்போதும் Off செய்து வைத்திருங்கள். பல App-கள் இருப்பிடத்தை கண்காணிப்பதால் ஹேக்கர்களுக்கு உங்கள் பற்றிய தகவல்களை சேகரிக்க உதவும்.
App-களுக்கு "Allow location tracking" அனுமதியை வழங்க வேண்டாம். தேவைப்படும்போது மட்டுமே இந்த அனுமதியை வழங்கவும்.
App-களை App Store அல்லது Google Play Store -லிருந்து மட்டுமே Download செய்யவும்.
வலுவான Passwords-ஐ பயன்படுத்தவும். அதுவும் குறைந்தது 12 எழுத்துக்கள் நீளம் கொண்டதாகவும், Capital Letters, Small Letters, எண்கள் கலவையாகவும் இருக்க வேண்டும்.
இரண்டு காரணி அங்கீகாரத்தை (2FA) இயக்கவும். 2FA, உங்கள் கணக்கிற்கு கூடுதல் பாதுகாப்பை சேர்க்கிறது.
மேலும் தகவலுக்கு, அரசாங்கத்தின் எச்சரிக்கை அறிவிப்பைப் பார்க்கவும். https://www.cert-in.org.in/
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |