இதோ வருகிறது ரோலபிள் ஐபோன்! ஸ்மார்ட்போன் உலகில் ஆப்பிள் புரட்சி
தொழில்நுட்ப உலகில் ஒரு புரட்சியை உருவாக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு அசைவையும் செய்து வருகிறது.
ஆப்பிளின் அனைத்து கேட்ஜெட்களும் மிகப் பாரிய வெற்றியை பெற்றுள்ளன, ஏனெனில் பயனர்களை எப்படி தங்கள் கைகளுக்குள் கொண்டுவருவது என்ற துல்லியமான யோசனை அவர்களிடம் உள்ளது.
இந்நிலையில், இப்போது வெளியாகியுள்ள தகவல் ஆப்பிள் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்து வருகிறது. ஆப்பிள் நிறுவனம் விரைவில் ரோலபிள் கேட்ஜெட்டை (Rollable Screen) சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளதாக தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
Getty Images
ஐபோன்கள், ஐபாட்கள், தொலைக்காட்சிகள், டெஸ்க்டாப் டிஸ்ப்ளேக்கள் மற்றும் வாகன டாஷ்போர்டுகள் போன்ற எதிர்கால தயாரிப்புகளில் இந்த தொழில்நுட்பம் இடம்பெறலாம் என்ற வகையில், உருட்டக்கூடிய அல்லது சுருட்டக்கூடிய திரையுடன் கூடிய சாதனத்திற்கான காப்புரிமையை ஆப்பிள் தாக்கல் செய்துள்ளது.
அமெரிக்க காப்புரிமை & வர்த்தக முத்திரை அலுவலகம் சமீபத்தில் ஆப்பிளின் 2014 விரிவாக்கக்கூடிய காட்சிகளின் ஆய்வின் அடிப்படையில் காப்புரிமை விண்ணப்பத்தை வெளியிட்டது.
USPTO
புதிய ஐபோன் மாடல்களில் இந்த தனித்துவமான டிஸ்பிளேவை அந்நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2026-ஆம் ஆண்டு ஆப்பிள் வெளியிடும் மேக்புக் ரோலபிள் ஸ்கிரீன் கொண்டதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வசதியுடன் கூடிய ஆப்பிள் நிறுவனத்தின் கேட்ஜெட்கள் சந்தைக்கு வரும் நிலையில், ஸ்மார்ட்போன் மார்க்கெட்டிங் துறை மற்றொரு புரட்சியை சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மிகவும் பிரபலமாகி வருவதை நாம் பார்க்கிறோம். இதற்குப் பிறகு, ரோலபிள் ஸ்மார்ட்போனின் வருகையால், அது எப்படி வரும் என்பதை தொழில்நுட்ப உலகம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Apple, Apple iPhone. Apple iPhone rollable, Apple iPhone foldable, Apple iPhone display, Apple launch, Apple rollable iPhone, Apple Files Patent