Visual Intelligence அம்சத்துடன் வெளியான iPhone16., Camera control button பற்றி தெரியுமா?
ஆப்பிள் நிறுவனம் iPhone16 மாடலை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று அறிமுகம் செய்துள்ளது.
இந்த போனில் பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் Visual Intelligence அம்சம் மிகவும் சுவாரஸ்யமானது.
ஆப்பிள் போனில் உள்ள கமெரா மூலம் தகவல்களை அணுக முடியும். ஆப்பிள் கமெராவை இயக்கினால், கமெரா சுட்டிக்காட்டும் இடம் பற்றிய தகவல்கள் உங்கள் புகைப்படத்தில் அப்டேட் ஆகும்.
தொலைபேசியின் பக்கவாட்டில் உள்ள camera control button வழியாக கமெரா கட்டுப்பாட்டு அம்சத்தை அணுகலாம்.
மென்பொருள் பொறியாளர் கிரேக் ஃபெடிரிஜி (Craig Federighi) இந்த Visual Intelligence அம்சத்தைப் பற்றி வெளிப்படுத்தியுள்ளார்.
காட்சி நுண்ணறிவு (Visual Intelligence) எவ்வாறு செயல்படுகிறது?
Camera control button-ஐ அழுத்திய பிறகு, கமெரா ஒரு உணவகத்தை நோக்கி சுட்டிக்காட்டப்பட்டால், அந்த உணவகத்தின் அனைத்து விவரங்களும் அந்த புகைப்படத்தில் பிரதிபலிக்கும். ஹோட்டலின் மதிப்புரைகள் மெனுவையும் அட்டவணை முன்பதிவு பற்றிய தகவல்களையும் காணமுடியும்.
அதேபோல், எந்தவொரு பகுதியிலும் நாய் இனங்கள் மற்றும் அடையாளங்கள் குறித்து காட்சி நுண்ணறிவு செயல்படும் என்று ஃபெடெர்கி கூறியுள்ளார்.
மேலும், நாட்காட்டியில் எந்த தகவலையும் சேர்க்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் Chat GPT உடன் இணைக்கப்பட்டுள்ளது என அறியப்படுகிறது. இருப்பினும், camera control axis மூலம் Chat GPT-யையும் அணுகலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Apple iPhone 16, iPhone 16’s new camera control button, visual intelligence