கொல்கத்தாவை கதறவிட்ட கே.எல்.ராகுல்! கடைசி ஓவரில் பஞ்சாப் கிங்ஸ் த்ரில் வெற்றி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 45-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் துபாய் மைதானத்தில் இன்று மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக வெங்கடேஷ் ஐயர் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினார்கள்.
சுப்மன் கில் 7 ஓட்டங்களில் அவுட்டாகி வெளியேற, அவரை தொடர்ந்து களமிறங்கிய திரிபாதி உடன் வெங்கடேஷ் பார்டன்ர்ஷிப் அமைத்து சிறப்பாக விளையாடினார்கள்.
Venkatesh Iyer is on song!
— IndianPremierLeague (@IPL) October 1, 2021
Brings up a fine FIFTY off 39 deliveries.
His 2nd in #VIVOIPL
Live - https://t.co/lUTQhNQURm #KKRvPBKS #VIVOIPL pic.twitter.com/QfV9iCK74e
அதிரடியாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 49 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 67 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட்டாகி வெளியேறினார்.
திரிபாதி 34 ஓட்டங்களும் கேப்டன் இயான் மோர்கன் வெறும் 2 ரன் மட்டுமே எடுத்து அவுட்டாகினர். சற்று அதிரடியாக ரானா 18 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பவுண்டரி எல்லையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
கொல்கத்தா அணி இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்கள் எடுத்தது.
பஞ்சாப் அணியில் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
#PBKS have got off to a steady start.
— IndianPremierLeague (@IPL) October 1, 2021
At the end of the powerplay, the scoreboard reads 46/0
Live - https://t.co/lUTQhNQURm #KKRvPBKS #VIVOIPL pic.twitter.com/b2vzezR4v4
இதையடுத்து 166 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் மயங்க் அகர்வால், கேப்டன் கே.எல்.ராகுல் சிறப்பான அடிதளத்தை அமைத்தனர்.
பஞ்சாப் 70 ஓட்டங்கள் எடுத்திருந்த போது மயங்க் அகர்வால் 40 ஓட்டங்கள் எடுத்து அவுட்டானார். நிக்லோஷ் பூரான், எய்டன் மக்ரம், தீபக் ஹோடா ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் அவுட்டாகினர். ஆனால் கேப்டன் கே.எல்.ராகுல் பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடந்தார்.
FIFTY!@klrahul11 brings up his half-century with a SIX. This is his 26th in #VIVOIPL
— IndianPremierLeague (@IPL) October 1, 2021
Live - https://t.co/lUTQhNQURm #KKRvPBKS #VIVOIPL pic.twitter.com/c8nkyvV4Ja
பஞ்சாப் இலக்கை விரட்ட கொல்கத்தா ரன் குவிப்பை கட்டுபடுத்த என போட்டி பரபரப்பாகவே அமைந்தது. கடைசி ஓவரில் பஞ்சாப் வெற்றி பெற 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கேப்டன் கே.எல்.ராகுல் பவுண்டரி எல்லையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
இதனால் பஞ்சாப் வழக்கம் போல் இறுதியில் சொதப்ப பஞ்சாப் பேட்ஸ்மேன் ஷாருக் கான் ஒரு பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். இதனால் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.
WHAT A WIN! ? ?
— IndianPremierLeague (@IPL) October 1, 2021
Yet another nail-biter as @PunjabKingsIPL pull off a 5 wicket win over #KKR in Dubai. ? ? #VIVOIPL #KKRvPBKS
Scorecard ? https://t.co/lUTQhNzjsM pic.twitter.com/3J2N1X6a4G