RCB அணிக்கு மீண்டும் கேப்டன் ஆகும் விராட் கோலி: உற்சாகத்தில் ரசிகர்கள் !
IPL ஏலத்திற்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், விராட் கோலியை கேப்டன் ஆக தொடரச்செய்வது, RCB அணிக்கு ஏலத்தில் அதிக தொகையை செலவிட்டு கேப்டனுக்கான இடத்தை பூர்த்தி செய்யும் தேவையை குறைக்கும் என இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு IPLலில் மூன்றுக்கும் மேற்பட்ட அணிகளுக்கு கேப்டன் பதவியில் இருந்து அணியை வழிநடத்திச் செல்ல வீரர்கள் இல்லாத நிலையில், RCB, KKR, KXIP போன்ற அணிகள் இந்த ஏலத்தில் கேப்டன் பொறுப்பில் அனுபவமுள்ள வீரர்களை தேர்ந்தெடுக்க அதிக தொகை செலவு செய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவந்துள்ளது.
இந்த நிலையில் RCB அணியின் கேப்டன் பொறுப்பில் விராட் கோலியை தொடர செய்வது என்பது அணிக்கு ஏலத்தில் தேவையற்ற செலவுகளை குறைக்கும் என அஜித் அகர்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
2013 ஆண்டு RCBயின் கேப்டன் பொறுப்பில் இருந்து நியூஸிலாந்து வீரர் டேனியல் வெட்டோரி விலகிய பின், விராட் கோலி கேப்டன் பொறுப்பை பெற்றார். சுமார் 9 ஆண்டுகள் கேப்டன் பொறுப்பில் தொடர்ந்த விராட் கோலி அணியை மூன்று முறை அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்து சென்றுள்ளார். இருந்தும் IPL கோப்பையை பெற்றுத்தர முடியாததால் கடந்த ஆண்டு கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டுக்கான IPLலில் RCB அணி மூன்று வீரர்களை தக்கவைத்துள்ளது அதில் விராட் கோலி 15 கோடிக்கும், மாஸ்வெல் 11 கோடிக்கும், சிராஜ் 7 கோடிக்கும் எடுத்துள்ளது, இருப்பினும் விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய காரணத்தால் கேப்டன் இல்லாத சூழ்நிலையில் RCB அணி தள்ளப்பட்டுள்ளது.
தற்போது அஜித் அகர்கரின் இந்த கருத்துக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விராட் கோலி ரசிகர்கள் என அனைவராலும் வரவேற்கப்பட்டு வருகிறது.
விராட் கோலி இன்டர்நேஷனல், ஐ.பி.ல் என அனைத்து கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய நிலையில் மீண்டும் விராட் கோலியை கேப்டன் ஆக தொடரச் செய்ய முடியுமா என்பது சந்தேகமே என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.