நான் மூடநம்பிக்கை கொண்டவன் அல்ல: ஜெர்சி நம்பர் 7-ன் ரகசியத்தை உடைத்த தோனி
நான் மூடநம்பிக்கை கொண்டவன் அல்ல என்றும், தனது ஜெர்சி எண் 7 என்பதற்கு எனது பிறந்த தினமே அர்த்தம் என்றும் இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவரான மஹேந்திரசிங் தோனி மனம்திறந்து பேசியுள்ளார்.
ஐபிஎல்யின் 15வது சீசன் இந்த மாதம் 26ம் திகதி தொடங்கவுள்ள நிலையில் அதன் முதல் போட்டியாக சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
அதற்கான வலைப்பயிற்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மற்றும் முன்னாள் இந்திய அணியின் கேப்டனான மஹேந்திரசிங் தோனி மற்றும் சென்னை அணி வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் சமூகவலைத்தளத்தின் வாயிலாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ள தோனி, தனக்கு எந்த ஒரு மூடநம்பிக்கையும் இல்லை என தெரிவித்துள்ளார்.
ரசிகர் ஒருவர் அவரது ஜெர்சி நம்பர் குறித்து கேள்வி எழுப்பியதற்கு தோனி இந்த பதிலை தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய தோனி, நம்பர் 7 என்பது என்னுடைய அதிஷ்ட எண் என்று பலர் ஆரம்பத்தில் நினைத்தனர். காரணம் எண் 7 என்பது பலருக்கு அதிஷ்ட எண்ணாக இருந்தது இல்லை, ஆனால் நான் எண்களை பற்றி மூடநம்பிக்கை கொண்டவன் அல்ல.
Leader of our Pride - Unbox! #CSKUnbox #WhistlePodu ?? pic.twitter.com/rT5X9tJbo8
— Chennai Super Kings (@ChennaiIPL) March 11, 2022
நான் மிகவும் எளிமையான காரணத்திற்காகவே இந்த நம்பர் தேர்ந்தெடுத்தேன். என் ஜெர்சி நம்பர் 7 என்பதற்கு நான் பிறந்த 7வது மாதம் ஜூலை 7ம் திகதியே காரணம், மேலும் அது எனது இதயத்திற்கு மிகவும் நெருக்கமான எண் என்றும் தெரிவித்துள்ளார்.
மனைவி குறித்து ரசிகர் கேட்ட ஒரு கேள்வி! தோனி அளித்த எதிர்பார்க்காத பதில்... வைரலாகும் வீடியோ