தோனிக்கு இவ்வளவு தலைக்கனமா? தோனியின் உண்மை முகத்தை போட்டுடைத்த பயிற்சியாளர்
ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக கடந்த 2016ம் ஆண்டு தோனி விளையாடிய போது "எனக்கு அறிவுரைகள் நீங்கள் தர வேண்டும்" என அணியின் செயல்திறன் பயிற்சியாளர் பிரசன்னா அகோரமிடம் தெரிவித்ததாக வெளியாகியுள்ள தகவல் பெரும் சர்சையை கிளப்பி வருகிறது.
கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் எழுந்த சூதாட்ட புகாரை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் 2 ஆண்டுகளுக்கு விளையாட தடை செய்யப்பட்ட போது சென்னை அணியின் கேப்டன் தோனி ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக கேப்டனாக ஆடினார்.
அப்போது, ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் புதிய செயல்திறன் பயிற்சியாளர் பிரசன்னா அகோரம் நியமிக்கப்பட்ட நிலையில், அவரிடம் நீங்கள் எனக்கு எப்போதும் அறிவுரை கூடாது என தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பிரசன்னா அகோரம் பேசுகையில், கடந்த 2016ம் ஆண்டு ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாடியபோது முதல் முறையாக தோனியை சந்தித்தேன்.
அதன்பிறகு நாங்கள் புனே மைதானத்தில் இருக்கும் போது என்னிடம் ஃபில்டர் காபி தரவா என்று கேட்டுவிட்டு அங்கிருந்தவரிடம் ஃபில்டர் காபி கொண்டு வர சொன்னார், அதைத்தொடர்ந்து நாங்கள் பேசிக்கொண்டு இருக்கும் போது தோனி என்னிடம் கூறினார், உங்களுக்கு இந்த துறையில் நிறைய அனுபவம் இருப்பது எனக்கு நன்றாக தெரியும், உங்களுடன் பணியாற்றுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.
எல்லா வழிமுறைகளையும் உத்திகளையும் வீரர்கள் உடன் பகிர்ந்து கொள்ளுங்கள், பயிற்சியாளர்களுடன் இணைந்து வீரர்களுக்கான உத்திகளை விவரிக்க சந்திப்புகளை நடத்துங்கள் ஆனால் அதில் என்னை எதிர்பார்க்காதீர்கள் என தெரிவித்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் நான் உங்களிடம் கேட்கும் வரை நீங்கள் எனக்கு எந்தவொரு அறிவுரையும் தர வேண்டாம், ஆனால் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் நீங்கள் பகிர்ந்து கொள்ளும் அனைத்து ஈமெயில் தகவல்களையும் எனக்கு மறக்காமல் அனுப்ப வேண்டும் என தெரிவித்ததாக பிரசன்னா அகோரம் கூறியுள்ளார்.
இதுவரை தோனியை கேப்டன் கூல்(cool) என்ற செய்தியை மட்டுமே கேட்ட ரசிகர்களுக்கு தோனி குறித்து வெளிவந்துள்ள இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.