ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக... தோனி செயலால் உற்சாகத்தில் ரசிகர்கள்!
ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக களத்தில் இறங்கிய முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து சென்னை அணி ரசிகர்களை தோனி மகிழ்வித்துள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்திலேயே அனைவருக்கும் அதிர்ச்சி தரும் விதமாக கேப்டன் பதிவில் இருந்து விலகிய தோனி, அந்த பொறுப்பை சென்னை அணியின் மற்றொரு முன்னணி ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தார்.
தோனியின் இந்த முடிவால் பெரும் சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு, சோகத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாண்ட இரண்டு போட்டிகளிலும் படுதோல்வியை தழுவியது.
First ball six by Dhoni over cover.#IPL2022 #CSKvLSG pic.twitter.com/ZtOKrpoBod
— Ashmin Aryal (@AryalAshmin) March 31, 2022
கொல்கத்தா அணியுடன் 131 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவி இருந்த நிலையில், இரண்டாவது போட்டியில் அதிரடியாக விளையாடி 210 ஓட்டங்கள் விளாசியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியையே தழுவியது.
இந்தநிலையில் தோல்வியால் ரசிகர்கள் மனமுடைந்து காணப்பட்டாலும் தோனியின் ஃபார்ம் ரசிகர்களை சற்று உற்சாகம் அளித்து நம்பிக்கை கொள்ள செய்துவருகிறது.
அந்தவகையில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி ஐபிஎல்-லில் வரலாற்றியே முதல் முறையாக களத்தில் இறங்கிய முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து ரசிகர்கள் அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.
அதிலும் ஆவேஷ் கானின் பந்தில் எக்ஸ்ட்ரா கவர் திசையில் சிக்ஸர் விளாசியது குறிப்பிடத்தக்கது.
எண்ணெய் நிலையங்களை ஏவுகணையால் தாக்கிய ரஷ்யா: புகையால் சூழப்பட்ட கருங்கடல் நகரம்!