தோனியின் நேர்மை இதுதான்... இணையத்தில் புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை அணியின் வீரர் தோனியின் செயல் பெரும் பேசுபொருளாக மாறி அவரை ரசிகர்கள் இணையத்தில் புகழ்ந்து வருகின்றனர்.
2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் மார்ச் 26ம் திகதி தொடங்கி தற்போது நடைபெற்று வரும் நிலையில், நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுதோல்வி அடைந்துள்ளது, சென்னை அணி இதுவரை விளையாண்ட மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்ததால் இது ஹாட்ரிக் தோல்வியாக முடிந்துள்ளது.
இந்தநிலையில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனி செய்த செயல் ஒன்று ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர் லியாம் லிவிங்ஸ்டன் எட்டாவது ஓவரில் சென்னை அணி வீரர் டிவைன் பிரிட்டோரியஸ் வீசிய பந்தை ஃபைன் லெக்கில் திசையில் திருப்பி விட முயன்றார், ஆனால் அது அவரது பேட்டின் விளிம்பில் பட்டு செல்லவே அதை தோனி டைவ் செய்து கேட்ச் எடுத்தார்.
இந்த முயற்சியில் தனக்கு சந்தேகம் வரவே கள நடுவரிடம் கேட்ச் பரிசோதிக்குமாறு தோனி நேர்மையாக கேட்டுக்கொண்டார், ரீப்ளேயில் பந்து தரையில் பட்டு வந்தது தெரியவர, லிவிங்ஸ்டன் நாட் அவுட் என்று அறிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக அவர் அடித்த அரைசதம் சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியது என்றாலும், தோனியின் ரசிகர்கள் அவரது செயலை இணையத்தில் "நேர்மை ,நேர்மை" என பதிவிட்டு வைரலாகி வருகின்றனர்.