ஷிகர் தவான் அதிரடி அரைசதம்! சென்னை அணிக்கு 188 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்த பஞ்சாப்
ஷிகர் தவானின் அதிரடி ஆட்டம் காரணமாக சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ஓட்டங்கள் குவித்தது.
15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 38-வது லீக் ஆட்டத்தில் இன்று, நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டு வருகிறது.
இந்தப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் துடுப்பாடியது. பஞ்சாப் அணியில் துவக்க வீரர் ஷிகர் தவான் அதிரடி காட்டினார்.
ஒரு முனையில் சீராக விக்கெட்டுகள் விழுந்தாலும் ஷிகர் தவான் பொறுப்புடன் விளையாடியதால், அந்த அணியின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருந்தது. பனுகா ராஜபக்சேவும் (44 ஓட்டங்கள்) சிறப்பான பங்களிப்பை அளித்தார்.
பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ஓட்டங்கள் சேர்த்தது. ஷிகர் தவன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 59 பந்துகளில் 88 ஓட்டங்கள் அடித்தார்.

