ஒரு நொடியில் வீணான 40 லட்சம்! ஹர்திக் பாண்ட்யாவின் செயல்
ஐபிஎல் போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவின் செயலால் 40 லட்சம் ரூபாய் பி.சி.சி.ஐ-க்கு பறிபோயுள்ளது.
ஐபிஎல் தொடரின் 24வது லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் அணியின் தலைவர் ஹர்திக் பாண்ட்யா 87 ஓட்டங்கள் விளாசி மிரட்டினார்.
ராஜஸ்தான் அணி பேட்டிங்கில் இருந்தபோது, சஞ்சு சாம்சன் அடித்த பந்தை அபாரமாக பீல்டிங் செய்த பாண்ட்யா, ஸ்டம்பை நோக்கி எறிந்தார். அவர் எறிந்த வேகத்தில் மிடில் ஸ்டம்ப் இரண்டாக உடைந்தது.
இதனைக் கண்டது பதற்றமடைந்த நடுவர்கள் சில நிமிடம் ஆலோசனை நடத்தினர். ஏனென்றால் ஐபிஎல்லில் பயன்படுத்தப்படும் ஸ்டம்புகளின் விலை இந்திய மதிப்பில் 40 லட்சம் ஆகும். இந்த ஸ்டம்புகள் அவுஸ்திரேலியாவில் இருந்து கொண்டு வரப்படுகின்றன. ரன்-அவுட் குழப்பங்களை தவிர்க்க இந்த ஸ்டம்புகளை பயன்படுத்துகின்றனர்.
ஒரு டி20 போட்டிக்கு ஆகும் செலவு ரூ.33 லட்சம். ஆனால் ஐபிஎல்லில் பயன்படுத்தப்படும் ஸ்டம்புகளின் விலையோ ரூ.40 லட்சம்.