14 ஓவரில் சுருண்டது லக்னோ! அசத்தல் வெற்றியுடன் குஜராத் பிளேஆஃப்ஸ்க்கு தகுதி
லக்னோவுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் 2022 தொடரின் பிளேஆஃப்களுக்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமையை பெற்றது.
ஐபிஎல் தொடரின் 57-வது லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் இன்று மோதின.
மகாராஷ்டிர கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாணய சுழற்சியை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் துடுப்பாட தேர்வு செய்தது.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரரான விர்த்திமான் சாஹா சொற்ப ஓட்டங்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். எனினும் சுப்மான் கில் நிதானமாக ஆடி ஓட்டங்களை சேர்க்கத் தொடங்கினார்.
லக்னோ அணியில் ஆவேஷ் கானின் அபார பந்துவீச்சால் மாத்திவ் வாடே 10 ஓட்டங்களிலும், ஹார்திக் பாண்டியா 11 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய டேவிட் மில்லர் 24 பந்துகளில் 26 ஓட்டங்களை எடுத்தார்.
அவரைத் தொடர்ந்து வந்த ராகுல் திவாட்டியா 16 பந்துகளில் 22 ஓட்டங்களை சேர்த்தார். எனினும் மறுமுனையில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மான் கில் அரை சதம் கடந்து 63 ஓட்டங்களைக் குவித்தார்.
முடிவில் 20 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து குஜராத் அணி 144 ஓட்டங்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து 145 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது.
எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக லக்னோ அணியின் பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டி காக், கே.எல். ராகுல், கரண் சர்மா, க்ருணால் பாண்டியா என அடுத்தடுத்த வந்த பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர்.
தீபக் ஹூடா மட்டும் 27 ஓட்டங்கள் எடுத்த நிலையில், மற்ற அனைவரும் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர். 13.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்த லக்னெள அணியால் 82 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதன் மூலம், 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றிபெற்றது. அந்த அணியின் சார்பாக சிறப்பாக பந்து வீசிய ரஷித் கான் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதுமட்டுமின்றி, ஐபிஎல் 2022 தொடரின் பிளேஆஃப்ஸ்க்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமையை பெற்றது.
That's that from Match 57.@gujarat_titans win by 62 runs and become the first team to qualify for #TATAIPL 2022 Playoffs.
— IndianPremierLeague (@IPL) May 10, 2022
Scorecard - https://t.co/45Tbqyj6pV #LSGvGT #TATAIPL pic.twitter.com/PgsuxfLKye


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021