ஐபிஎல் 2022... அடுத்தாண்டு தொடரில் மும்பை அணி தக்கவைக்க போகும் 3 வீரர்கள் இவர்கள் தான்! மத்தவங்களுக்கு கல்தா
அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி யார் யாரை தக்கவைக்கும் என்பது குறித்து தகவல் கசிந்துள்ளது.
ஐபிஎல்லில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி அதிகமுறை கோப்பையை தட்டி தூக்கிய அணி என்ற பெருமையை மும்பை அணி பெற்றுள்ளது.
இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறையை கோப்பையை வென்றிருக்கிறது. ஆனால் சமீபத்தில் முடிந்த 14ஆவது சீசனில் படுமோசமாக சொதப்பி பிளே ஆஃப் சுற்றுக்கு கூட அந்த அணி முன்னேறவில்லை.
அடுத்தாண்டு 15ஆவது சீசன் துவங்கவுள்ளது. இதில் 10 அணிகள்வரை பங்கேற்கவுள்ளதால், தற்போதுள்ள 8 அணிகள் மூன்று வீரர்களை மட்டும் தக்கவைத்துவிட்டு, மற்றவர்களை விடுவிக்க வேண்டும் என ஐசிசி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால், யாரை விடுக்க வேண்டும், விடுவிக்க கூடாது என்பது தொடர்பாக ஐபிஎல் அணிகள் தொடர் விவாதங்களில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் தக்கவைக்கப்போகும் மூன்று வீரர்கள் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
கெய்ரன் பொல்லார்ட்
மும்பை இந்தியன்ஸ் அணியின் துணை கேப்டனான பொல்லார்ட் ஆல் ரவுண்டர் ஆவார். ரோஹித் ஷர்மா இல்லாத நேரங்களில் அணியை கட்டுக்கோப்பாக வழி நடத்தியதை நாம் பார்த்திருக்கிறோம். பல திறமைகளை உள்ளடக்கியிருக்கும் பொல்லார்டை மும்பை தக்கவைக்கும் எனக் கருதப்படுகிறது.
ஜஸ்ப்ரீத் பும்ரா
பும்ரா போன்ற யார்க்கர் மன்னன்கள் டெத் ஓவர்களின்போது அவசியம் தேவை என மும்பை அணி கருதுவதாக தெரிகிறது. இதன் காரணமாக இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் போன்றவர்களை தவிர்த்து, பும்ரா தக்கவைக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரோகித் சர்மா
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக இருக்க கூடியவர் ரோஹித் ஷர்மா. இவர் நிச்சயம் தக்கவைக்கப்படுவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 5 முறை கோப்பை வென்றுகொடுத்து, ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸை வெற்றிகரமான அணியாக திகழவைத்தவர்.