ரொனால்டோவாக மாறினால்...முதலில் மூளையை ஆய்வு செய்வேன்: விராட் கோலி!
நான் ரொனால்டோவாக மாறினால் எனது மூளையை முதலில் சோதித்து பார்ப்பேன் என இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பெங்களூரு அணியின் முன்னணி வீரர் விராட் கோலி தனக்கு பிடித்த விளையாட்டு வீரர் போர்ச்சுக்கல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டா என தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளின் மத்தியில் பெங்களூரு அணி வீரர்களுக்கு நடத்தப்பட்ட போட்டோஷுட் நிகழ்ச்சியின்போது கேட்கப்பட்ட கேள்விக்கு விராட் கோலி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் ஒருநாள் நீங்கள் காலையில் எழுந்தவுடன் ரொனால்டோவாக மாறினால் முதலில் என்ன செய்வீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, தான் முதலில் எனது மூளையை சோதித்து பார்ப்பேன் என தெரிவித்துள்ளார்.
ஏனென்றால், அவருக்கு இருக்கக்கூடிய அந்த மன வலிமை எங்கிருந்து வருகிறது என்பதை நான் ஆராய்ச்சி செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, RCB-யில் தனது மறக்கமுடியாத தருணங்களையும், 2016ல் நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தருணங்களையும் இந்த நிகழ்ச்சியில் அவர் பகிர்ந்துள்ளார்.