ஐபிஎல் தொடரில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் சந்தோஷம் - பிசிசிஐயின் மெகா திட்டம்
2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் அட்டவணை மார்ச் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 10 அணிகள் பங்கேற்கும் நிலையில் இரண்டு குரூப்களாக பிரிக்கப்பட்டு தலா 5 அணிகள் இடம் பெற்றுள்ளன.
அதன் படி குரூப் ஏ பிரிவில் மும்பை,கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி, லக்னோ ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. குருப் பி பிரிவில் நடப்பு சாம்பியனான சென்னை, ஐதராபாத், பெங்களூரு, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகள் மோதுகின்றன.
ஒவ்வொரு பிரிவிலும் ஒரு அணி மற்ற அணிகளுடன் 2 முறை மோதும்.அதேபோல் எதிர் குரூப்பில் உள்ள 4 அணிகளுடன் தலா ஒரு முறையும் மோதும் . இதனிடையே ஐபிஎல் அட்டவணையில் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதேபோல் இந்த அட்டவணையில் மொத்தம் 12 முறை ஒரே நாளில் 2 போட்டிகள் நடைபெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
மேலும் சென்னை, மும்பை, பெங்களூரு அணிகள் மோதும் பெரும்பாலான போட்டிகள் வார இறுதி நாட்களில் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.