2022 ஐபிஎல் தொடர்! மூன்று இலங்கை வீரர்கள் மீது எகிறும் எதிர்பார்ப்பு... தோனி படையில் மிரட்ட போகும் வீரர்
ஐபிஎல் தொடருக்கும் இலங்கை வீரர்களுக்கும் எப்போதுமே நெருங்கிய பந்தம் உள்ளது என கூறினால் அது மிகையாகாது!
ஏனெனில் லசித் மலிங்கா, மஹேலா ஜெயவர்தனே, சங்ககாரா, மேத்யூஸ் போன்ற வீரர்கள் ஐபிஎல் தொடரில் பல சாதனைகளை செய்துள்ளனர்.
அந்த வகையில் இந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் 5 இலங்கை வீரர்கள் வாங்கப்பட்டுள்ளனர்.
இதில் மூன்று வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
வனிந்து ஹசரங்கா
வனிந்துவை பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ரூ 10.75 கோடி என்ற இமாலய தொகைக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன இலங்கை வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். வனிந்து உலக கிரிக்கெட் அரங்கில் சிறந்த ஆல்ரவுண்டராக திகழ்கிறார். நல்ல பார்மில் உள்ள வனிந்து வரும் ஐபிஎல் தொடரில் கலக்க காத்திருக்கிறார்.
துஸ்மந்த் சமீரா
இந்தாண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக களம் காணும் அணியாக உள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சமீராவை ரூ 2 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது. வலது கை வேகப்பந்து வீச்சாளரான சமீரா சிறப்பான பார்மில் இருக்கிறார். அவர் இந்த ஐபிஎல் தொடர்பில் நன்றாக செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மஹிஷ் தீக்ஷனா
21 வயது இளம் வீரரான தீக்ஷனாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ 70 லட்சம் கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது.
தோனி படையில் விளையாட போகும் தீக்ஷனா தனது மாயாஜால சுழற்பந்து வீச்சின் மூலம் எதிரணி வீரர்களை திணடிறப்பார் என்பதில் சந்தேகமில்லை.