ஐபில் 2022 தொடரில் புதிததாக களமிறங்கும் 2 அணிகள்..! ஒரு அணியின் அடிப்படை விலை இத்தனை ஆயிரம் கோடியா? கசிந்த தகவல்
ஐபில் 2022 தொடரில் புதிததாக 2 அணிகள் சேர்க்கப்படவுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
தற்போது 8 அணிகளுக்குள் நடைபெறும் ஐபிஎல் தொடரில், அடுத்த ஆண்டு முதல் 10 அணிகள் மோதும் எனவும், அடுத்த சீசனில் 74 ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதிததாக ஏலம் விடப்படவுள்ள அணிகளின் அடிப்படை விலை தலா 2000 கோடி என பிசிசிஐ நிர்ணயித்துள்ளதாக மூத்த பிசிசிஐ வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ-க்கு 5000 கோடி லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது.
ஆண்டுக்கு ரூ .3000 கோடி வருவாய் உள்ள நிறுவனங்கள் மட்டுமே அணிகளுக்கு ஏலம் எடுக்க அனுமதிக்கப்படும் என்று அறியப்படுகிறது.
அகமதாபாத், லக்னோ அல்லது புனே ஆகிய நகரங்களில் ஏதேனும் இரண்டை தளமாக கொண்டு இரண்டு புதிய ஐபிஎல் அணிகள் உருவாகும் என கூறப்படுகிறது.
அதானி குழு, RPG Sanjeev Goenka குழு, புகழ்பெற்ற மருந்து நிறுவனம் டொரண்ட் மற்றும் முக்கிய வங்கியாளர் ஆகியோர் அணிகளை வாங்குவதில் தீவிர ஆர்வம் காட்டிய வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.