சதம் விளாசிய ஹரி புரூக்..!கொல்கத்தா அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் அபார வெற்றி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
சதம் விளாசிய ஹரி புரூக்
ஐபிஎல்-லின் 19வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதின.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதல் பேட்டிங்கில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 228 ஓட்டங்களை குவித்தது.
I. C. Y. M. I
— IndianPremierLeague (@IPL) April 14, 2023
When Harry Brook hits, it stays HIT! ??
Relive his two cracking SIXES off Umesh Yadav ? ?
Follow the match ▶️ https://t.co/odv5HZvk4p#TATAIPL | #KKRvSRH pic.twitter.com/rVBtgeInVW
சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஹரி புரூக், 55 பந்துகளில் 3 சிக்சர் மற்றும் 12 பவுண்டரிகளை விளாசி 100 ஓட்டங்களை சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.
திரிபாதியின் விக்கெட் இழப்பிற்கு பிறகு களத்துக்கு வந்த மார்க்ராம் 26 பந்துகளில் 5 சிக்சர் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 50 ஓட்டங்கள் சேர்த்தார்.
சன்ரைசர்ஸ் அணி வெற்றி
229 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியில் தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஓட்டங்கள் எதுவும் குவிக்காமல் பெவிலியன் திரும்பினார்.
70 runs. 24 balls. ??
— IndianPremierLeague (@IPL) April 14, 2023
Rinku Singh and Nitish Rana at the crease ✅
It's Game ON in Kolkata ?
Follow the match ▶️ https://t.co/odv5HZvk4p#TATAIPL | #KKRvSRH pic.twitter.com/1UGlI0htQg
அவரை தொடர்ந்து வந்த வெங்கடேஷ் ஐயர், சுனில் நரைன் ஆகியோரும் சொற்ப ஓட்டங்களில் வெளியேறி கொல்கத்தா ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தனர்.
இந்நிலையில் களத்தில் ஜோடி சேர்ந்த கேப்டன் நிதிஷ் ராணா மற்றும் ரிங்கு சிங் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியின் ஓட்டங்களை உயர்த்தினர்.
நிதிஷ் ராணா 41 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 6 சிக்சர்களுடன் 75 ஓட்டங்கள் குவித்து இருந்த நிலையில் நடராஜன் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
மறுப்புறம் நிலைத்து விளையாடிய ரிங்கு சிங் 58 ஓட்டங்கள் ஆட்டமிழக்காமல் குவித்தும், கொல்கத்தா அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 205 ஓட்டங்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.
இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.