ஐபிஎல் 2023 மினி ஏலத்தில் தோனி குறிவைக்கும் முக்கிய வீரர்: சிஎஸ்கே திட்டத்தால் ரசிகர்கள் உற்சாகம்
ஐபிஎல் 2023ம் ஆண்டுக்கான வீரர்கள் மினி ஏலம் கொச்சியில் வைத்து நடைபெற உள்ள நிலையில், இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம் குர்ரனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்த்து கொள்ள கேப்டன் தோனி ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐபிஎல் மினி வீரர்கள் ஏலம்
உலக கிரிக்கெட் தொடர்களில் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் மிகவும் பிரம்மாண்டமான கிரிக்கெட் தொடர்களில் ஒன்றாக பார்க்கப்பட்டு வருகிறது.
மொத்தம் 10 அணிகள் மோதிக் கொள்ளும் இந்த ஐபிஎல் தொடரின் 2023ம் ஆண்டுக்கான வீரர்கள் மினி ஏலம் டிசம்பர் 23ம் திகதி கேரள மாநிலம் கொச்சியில் வைத்து நடைபெற உள்ளது,
T Minus 10 Days for D-Day! ?⏳#SuperAuction #WhistlePodu??
— Chennai Super Kings (@ChennaiIPL) December 13, 2022
இதில் பென் ஸ்டோக்ஸ், கேமரூன் கிரீன், சாம் கர்ரன், ஹாரி புரூக் , நிக்கோலஸ் பூரன் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் மீது அணிகள் தங்கள் அதிக கவனத்தை செலுத்தி வருகின்றனர்.
சாம் கர்ரன் மீது தோனி
ஆர்வம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து டுவைன் பிராவோ வெளியேறியுள்ள நிலையில், அவருக்கான சரியான மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் தேடி வருகிறது.
இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு ஐபிஎல் வீரர்கள் ஏலத்தை தவிர விட்ட இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் சாம் குர்ரன், சென்னை அணியால் பெரிய அளவில் வாங்க திட்டமிட்டுள்ளது.
Kadaikutty comes out a topper! Well done, Sam C! ?#WhistlePodu #Yellove ??
— Chennai Super Kings (@ChennaiIPL) November 13, 2022
?: @ICC pic.twitter.com/2U2DGLrCk4
சிஎஸ்கே அணியின் ஆதாரங்களின்படி, ஐபிஎல் ஏலத்தில் சாம் குர்ரனை சிஎஸ்கே-வில் சேர்க்க கேப்டன் தோனி அணி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே 2020 மற்றும் 2021 இல் மஞ்சள் ஜெர்சியில் விளையாடி இருந்த சாம் குர்ரன், தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அத்துடன் டி20 உலக கோப்பையில் அவருடைய தற்போதைய பார்ம் அபாரமாக இருப்பதால் சென்னை அணியில் டுவைன் பிராவோ-வுக்கு மாற்று வீரராக சாம் குர்ரன் நிச்சயம் இருப்பார் என்று சிஎஸ்கே அணி நிர்வாகம் கருதுகிறது.