ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரருக்கு அதிக விலை! போன தடவையை விட ரொம்ப அதிகம்
2023 ஐபிஎல் சீசனுக்கான ஏலம் சமீபத்தில் நடைபெற்றது. அதில் பலரும் எதிர்பார்க்காத வீரர்கள் அதிக விலைக்கு வாங்கப்பட்டனர். குறிப்பாக முந்தைய சீசனில் குறைந்த விலைக்கு விளையாடிய சில கிரிக்கெட் வீரர்கள் இந்த சீசனின் ஏலத்தில் திடீரென்று அதிக தொகைக்கு வாங்கப்பட்டுள்ளனர்.
ரிலீ ரோசவ் (1433%)
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேனான இவரை 4.6 கோடிக்கு டெல்லி நிர்வாகம் வாங்கியது. கடைசியாக கடந்த 2015ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்காக வெறும் 30 லட்சத்துக்கு மட்டுமே அவர் விளையாடியிருந்தார்.
cricket cu
ஹென்றிச் க்ளாஸின் (950%)
தென்னாபிரிக்காவை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவரான இவர் 2023 ஏலத்தில் ஹைதராபாத் அணி நிர்வாகம் 5.25 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கியது. அவர் கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு வெறும் 50 லட்சத்துக்கு பெங்களூரு அணியில் விளையாடினார்.
நாராயன் ஜெகதீசன் (375%)
தமிழக வீரரான இவர் 90 லட்சத்திற்கு விலை போயுள்ளார். கடந்த சீசனில் சென்னை அணிக்காக 20 லட்சத்துக்கு விளையாடிய ஜெகதீசன் 2023 சீசனில் 375% அதிக சம்பளத்திற்கு கொல்கத்தா அணியில் விளையாடப் போகிறார்.
bharattimes