நேற்று நான் தூங்கவே இல்லை! ஐபிஎல் 2023 ஏலத்தில் ரூ.18.50 கோடி சம்பாதித்த 'சுட்டிக் குழந்தை' உற்சாகம்
ஐபிஎல் 2023 ஏலத்தில் ரூ.18.50 கோடிக்கு வாங்கப்பட்ட பிறகு நேற்றிரவு தனக்கு தூக்கமே வரவில்லை என கூறியுள்ளார் இங்கிலாந்து இளம் வீரர் சாம் கரன்.
'சுட்டிக் குழந்தை' என என செல்லமாக அழைக்கப்படும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் சாம் கரன் இப்போது மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) வரலாற்றில் அவர் மிக அதிக விலைக்கு வாங்கப்பட்டவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார் சாம் கரன்.
ஏனெனில், வெள்ளிக்கிழமை பெங்களூருவில் நடந்த ஐபிஎல் 2023 மினி ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அவரை ரூ.18.50 கோடிக்கு வாங்கியது. இதன் மூலம், அவர் 2019-ல் ஐபிஎல் அறிமுகமான பஞ்சாப் கிங்ஸுக்கே மீண்டும் விளையாடவுள்ளார்.
இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் சாம் கரன், இதை எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.
இது குறித்து அவர் பேசுகையில், "நேற்று இரவு நான் சரியாக தூங்கவில்லை, கொஞ்சம் உற்சாகமாக இருந்தேன், மேலும் ஏலம் எப்படி நடக்கப் போகிறது என்று பதட்டமாக இருந்தது. ஆனால் எனக்கு இப்போது கிடைத்திருப்பதை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன் மற்றும் நம்பமுடியாத அளவிற்கு தாழ்மையுடன் இருக்கிறேன். அதைப் பெறுவதற்கு எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இருந்ததில்லை” என்று கூறினார்.
அவுஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையில் 13 விக்கெட்டுகளுடன் போட்டியின் சிறந்த வீரரான சாம் கரன், பஞ்சாப் கிங்ஸில் தனது இங்கிலாந்து அணி வீரர்களான லியாம் லிவிங்ஸ்டோன் மற்றும் ஜானி பேர்ஸ்டோவுடன் இணைந்து விளையாடவுள்ளார்.
Getty Images
மீண்டும் பஞ்சாப் அணிக்கு விளையாடுவதைப் பற்றி பேசிய சாம், “நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் அறிமுகமான பஞ்சாப்புடனான ஐபிஎல்லில் எனக்கு எல்லாமே தொடங்கியது. எனவே, அங்கு திரும்பிச் செல்வது அருமையாகத் தோன்றுகிறது, மேலும் சில ஆங்கில அணி வீரர்களுடன் சேர ஆவலுடன் காத்திருக்கிறேன்." என்றார்.
இங்கிலாந்துடனான வெற்றிகரமான உலகக் கோப்பையை அனுபவித்த சாம் கரன் இப்போது ஐபிஎல் 2023-ல் தான் அதிக விலைக்கு வாங்கப்பட்டதற்கு நியமாக விளையாடிக்கொடுக்க விரும்புகிறார்.